மனிதக் குழந்தைக்கு “தாய்” ஆன குரங்கு – நெகிழ்ச்சியில் ஹரியானா
ஹரியானா: ஹரியானாவில் குழந்தை ஒன்றை குரங்கு ஒன்று தாயின் இடத்தில் இருந்து கவனித்து வருகின்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது.

நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது.
சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு "நானி" என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர். அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது.
குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு சோறூட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராமரிப்பதிலும் பெற்ற தாயை போலவே நானி நடந்துகொள்கிறது.
வளர்ந்து வரும் நாகரிக உலகில் அடுத்தவருக்கு உதவும் குணத்தை மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் வேளையில், மனிதர்களால் விலங்கினம் என அழைக்கப்படும் குரங்கின் குணம் நாளுக்கு நாள் மேன்மையடைந்து வருவதை எப்படி பாராட்டினாலும் போதாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications