தேசிய கொடிக்கு போட்டியாக பாஜக கொடி.. முஸ்லிம்களின் யாத்திரையில் பஜ்ரங்தள், விஎச்பி கொடூர தாக்குதல்
போபால்: மத்திய பிரதேசத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று இஸ்லாமியர்கள் நடத்திய திராங்கா யாத்திரை எனப்படும் தேசிய கொடி ஊர்வலத்திற்குள் புகுந்த விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்பினர் அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளன.
கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தரப்பினரால் திராங்கா யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. தேச பக்தியை ஏற்படுத்தும் வகையில், சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவூட்டும் வகையிலும் இந்த மூவர்ண கொடி ஏந்தி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் இந்த ஊர்வலத்தை நடத்தினர்.

அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் குனாவில் இஸ்லாமியர்கள் மூவர்ண கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் பாஜக கொடியுடன் குறுக்கே புகுந்து ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. யாத்திரை சென்று கொண்டு இருந்த கடை வீதியில் பயங்கர ஆயுதங்களுடன் விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்பினர் ரகளை செய்தார்கள். அங்கு திறக்கப்பட்டு இருந்த கடைகளை மூட சொல்லி மிரட்டியுள்ளார்கள். மூடப்படாத கடைகளை அவர்கள் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதனை வீடியோவாக பதிவு செய்த இஸ்லாமியர்கள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்து இருக்கிறார்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திராங்கா யாத்திரையிலேயே பாஜக கொடியுடன் ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு கலவரத்தில் ஈடுபட்ட விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினரில் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Muslims were taking out the Tiranga Yatra in Madhya Pradesh's Guna when the alleged Bajrang Dal and VHP workers brought the Tiranga Yatra from the front and shouted Jai Shri Ram slogans in the procession being taken out by the Muslims. The Muslims were provoked, and later When… pic.twitter.com/7OPrR85YVu
— Meer Faisal (@meerfaisal01) August 16, 2023
கடந்த சில நாட்களுக்கு முன் ஹரியானாவில் இதே விஷ்வ இந்து, பஜ்ரங்தள் அமைப்பினர் நடத்திய மற்றொரு ஊர்வலத்தால் வெடித்த கலவரம் காரணமாக பல மாவட்டங்கள் கலவரக் காடாகின. மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டு இமாம் ஒருவரும் கொல்லப்பட்டார். ஏராளமான முஸ்லிம்களின் வீடுகள் அரசால் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் நடந்து இருக்கும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications