For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரை உலுக்கும் 'வாடகை தாய்' மோசடி வழக்கில் கைதான டாக்டருக்கு ஜாமீன் மறுப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக தம்பதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, கடத்தி வரப்பட்ட குழந்தைகளை அவர்களுக்கு அளித்த புகாரின் பேரில் கைதான பிரபல மருத்துவமனை டாக்டர் கே.டி.குருமூர்த்திக்கு கோர்ட் ஜாமீன் மறுத்துள்ளது.

Bangalore surrogacy racket: K.T.Gurumurthy's bail plea dismissed

பெங்களூர் பசவேஸ்வரநகர் முதலாவது ஸ்டேஜ் பகுதியில் தலைமையிடத்தை கொண்டுள்ளது, ஸ்ருதி குளோபல் மெடிகேர் மற்றும் ரிசர்ச் சென்டர் (Shrushti Global Medicare and Research Center). பெங்களூரின் பல பகுதிகளிலும் இந்த மருத்துவமனைக்கு கிளைகள் உள்ளன.குழந்தையில்லாத பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்வதாகவும், வாடகை தாய் மூலமாக குழந்தை பிறப்பிக்க செய்து தருவதாகவும் கூறி இந்த மருத்துவமனை விளம்பரம் செய்துவந்தது.

இந்த மருத்துவமனையின் நிறுவனரான டாக்டர் கே.டி.குருமூர்த்தி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வரும் தம்பதிகளிடம், அநாதை குழந்தைகள், அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளை அளித்து, இதுதான் உங்களுக்கு பிறந்த குழந்தை என்று ஏமாற்றி வந்தார். டான் பாஸ்கோ என்ற தொழிலதிபர் தன்னிடம் அளிக்கப்பட்ட குழந்தையின் டிஎன்ஏவை சோதித்து பார்த்தபோதுதான், அது தனக்கு பிறந்த குழந்தை இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து டான்பாஸ்கோ அளித்த புகாரின் பேரில் குருமூர்த்தி கைதானார். இதையடுத்து பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீஸ் காவலில் உள்ள குருமூர்த்தி ஜாமீன் கேட்டு பெங்களூர் ஏழாவது ஏ.சி.எம்.எம் மருத்துவமனையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று மாலை விசாரித்த நீதிபதி சி.செல்வகுமார், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

English summary
Srushti Global Trust chief K T Gurumurthy's bail plea who arrested on charges of running a fake surrogacy racket and human trafficking dismissed by Bangalore court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X