ம.பி. போபால் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா- தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு!
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார்.
போபால் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா பெல் கேரீர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் வாழும் அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைகக் கூடிய பணியை போபால் தமிழ் சங்கம் மேற்கொண்டு வருவதாக அதன் பொதுச்செயலாளர் சுவாமிதுரை தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வந்தாலும் தமிழரின் பாரம்பரியத்தை பண்பாட்டை மறக்காமல் பொங்கல் விழாவை கொண்டாடுவதாக போபால் தமிழ் சங்கத்தின் பொருளாளர் ஏ.சிவகுமார் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மஸ்தான், தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் விழா. போபாலில் பொங்கல் விழா கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விருத்தாசலம் லயன்ஸ் கிளப் தலைவர் அகர்சந்த், நிர்வாகிகள் அருள், சந்திரசேகரன், முத்து நாராயணன், ஆர்.நடேசன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய போபால் தமிழ் சங்கத் தலைவர் ராஜூ, தமிழ்நாட்டில் இருந்து வெகுதொலைவில் இருந்தால் பண்பாட்டை மறக்காமல் போபாலில் பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறோம் என்றார். போபாலில் தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற இப்பொங்கல் விழாவில் பெரும் உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னதாக தமிழ்நாடு அமைச்சர் மஸ்தானை ம.பி. மருத்துவ கல்வி , விஷவாயு தாக்குதல் இழப்பீடு வழங்கல் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் வரவேற்றார்.

போபால் தமிழ் சங்கம் 2013 ஆம் ஆண்டில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரால் வேலைவாய்ப்பு தொடர்பாக போபாலுக்கு வந்தவர்களை ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள ஒரு பொதுவான தளத்தை உருவாக்க உருவாக்கப்பட்டது. மனிதாபிமானத்தை ஊக்குவித்தல், சேகரித்தல் உறுப்பினர்களுக்கு சமூக மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல் ஆகியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு பதிவு செய்யப்பெற்ற இப்பமைப்பு சாதி, மத, அரசியல் கட்சி மாறுபாடுகளுக்கப்பால் இயங்கி வருகிறது.














Click it and Unblock the Notifications