'அந்த' மாதிரி சைட்ட ஓபன் செய்தால் சிவபஜனை பாடல் ஒலிக்கும்...பனாரஸ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆப்(பு)!
போர்னோகிராபி வெப்சைட்டுகளை ஓபன் செய்தால் பஜனைப் பாடல்கள் ஒலிப்பது போன்ற புதிய செயலியை பனாரஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் உருவாக்கியுள்ளார்.
வாரனாசி: பனாரஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியில் இன்ஸ்டிட்யூட்டின் பேராசிரியர் போர்னோ சைட்டுகளை ஓபன் செய்தாலே பஜனைப் பாடல்கள் ஒலிப்பது போன்ற செயலியை ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் இணையதள பயன்பாடு என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. குறிப்பாக செல்போனிலும் இந்த இணையதள பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் இளம் தலைமுறையினர் தவறான தேடல்களுக்கு ஆளாகிவிடுகின்றனர். எந்நேரமும் இணையதளத்திலேயே மூழ்கியிருக்கும் இளைஞர்கள் பல நேரங்களில் தவறான பக்கங்களை பார்த்து தீய பழக்கங்களைப் பழகிக்கொள்கின்றனர்.
போர்னோகிராபி வெப்சைட்டுகளை இளைஞர்கள் அதிக அளவில் நாடுவது வாரனாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் டாக்டர் விஜய் நாத் மிஸ்ராவிற்கு இதை தடுப்பதற்கான ஒரு யோசகை கிடைத்துள்ளது.

பஜனை பாடல் கேட்கும்
இதன் அடிப்படையில் நியூராலஜி பேராசிரியரான அவர் பனாரஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். 'ஹர ஹர மகாதேவ்' என்ற அந்த செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது, இது போர்னோ சைட்டுகளை பிளாக் செய்வதோது, அந்த மாதிரியான சைட்டுகளை திறந்தாலே பஜனைப் பாடல்களும் ஒலிக்கும் படியும் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் வேறு பாடல்கள்
தற்போது இந்த செயலியில் ஹர ஹர மகாதேவனின் பாடல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் காயத்ரி மந்திரம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோரின் எழுச்சியான உரையாடல்களையும் ஒலிக்கச் செய்ய இந்தக் குழு திட்டமிட்டுள்ளது.
|
மதவாத சிந்தனையல்ல
மேலும் இது மதவாத சிந்தனையோடு உருவாக்கப்பட்ட செயலியல்ல என்றும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் இது போன்ற இணையதளங்களை திறந்தால் 'அல்லாஹ் அக்பர்' என்று ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பபட உள்ளதாகவும் கூறினார். இளைஞர்கள் போர்னோகிராபிக்கு அடிமையாவதில் இருந்து தடுப்பது ஒன்றே இந்த செயலியின் நோக்கம் என்பது பேராசிரியர் விஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

பயனுள்ள ஆப்
இந்த செயலிலை டெஸ்க்டாப் மற்றும் மொபைல் இரண்டிலுமே பயன்படுத்தலாம். மேலும் இதற்கு ஹர ஹர மகாதேவ் என்று பெயரிடப்பட்டுள்ளதற்கான காரணத்தையும் பேராசிரியர் விளக்கியுள்ளார். சிவன் தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்தவர் என்ற நோக்கிலேயே செயலிக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications