பீகார்: பிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 65% ஆக அதிகரிக்கும் மசோதா அதிரடி நிறைவேற்றம்- நிதிஷ் ராக்ஸ்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டை 50%-ல் இருந்து 65% ஆக உயர்த்த வகை செய்யும் மசோதா இன்று அம்மாநில சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பீகார் மாநிலத்தில் அண்மையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை மாநில சட்டசபையில் தாக்கல் செய்தது பீகாரில் ஆளும் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அரசு.

இந்தியாவில் 1931ம் ஆண்டுதான் ஆங்கிலேயர் ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முதல் முறையாக பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை பகிரங்கப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு அளவை 65% ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். பின்னர் இந்த 65% இடஒதுக்கீடு முடிவுக்கு பீகார் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது.
இதனடிப்படையில் இன்று பீகார் சட்டசபையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு 65% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

பீகார் மாநிலத்தில் இதுவரையில் இருக்கும் இடஒதுக்கீடு அளவு:
பிற்படுத்தப்பட்டோர்: 30%
ஈபிசி - 18%
ஓபிசி - 12 %
தாழ்த்தப்பட்டோர் : 16%
பழங்குடிகள்: 1%
பிற்படுத்தப்பட்ட பெண்கள்: 3%
மொத்தம் 50% இடஒதுக்கீடு.
தற்போது திருத்தி அமைக்கப்பட்ட இடஒதுக்கீடு அளவு:
பிற்படுத்தப்பட்டோர்: 43%
தாழ்த்தப்பட்டோர் : 20%
பழங்குடிகள்: 2%
மொத்தமாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு அளவு 65% ஆக உயருகிறது.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டையும் சேர்த்தால் பீகாரில் இடஒதுக்கீடு அளவு 75%ஆகும். உச்சநீதிமன்றமானது இடஒதுக்கீடு அளவு 50%க்கும் அதிகமாக இருக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு 69% இடஒதுக்கீட்டை அரசியல் சாசனப் பாதுகாப்புடன் செயல்படுத்தி வருகிறது. மேலும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு 50% இடஒதுக்கீடு அளவை மீறுவதுதானே? என்பதும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications