திடீரென நிலை தடுமாறி விழுந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.. தாங்கிப் பிடித்த பாதுகாவலர்கள்!
பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இன்று ஆசிரியர் தினத்தையொட்டி பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், இன்று பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பாட்னா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கிரிஷ் குமார் சவுத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இந்த நிகழ்வில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் இருவரும் இணைந்து கல்வெட்டு ஒன்றைத் திறந்து வைக்கச் சென்றனர்.
அப்போது கல்வெட்டை திறக்கச் சென்ற நிதிஷ் குமார், திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதை உடனடியாக கவனித்த அவரது பாதுகாவலர்கள் உடனே சுதாரித்து அவரை தூக்கிவிட்டனர். இதில் நிதிஷ் குமாருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

பின்னர் சில நொடிகளிலேயே நிதிஷ் குமார் இயல்பு நிலைக்குத் திரும்பினார். திடீரென சமநிலை தவறி தடுமாறிய அவர், பாதுகாவலர்கள் தூக்கி விட்ட பிறகு சிரித்தார். பிறகு இயல்பாக நடந்து சென்றார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications