மோடி ஓபிசி என பேசுவது பொய்-'ஜாதி வாரி கணக்கெடுப்பு' மறுப்புக்கு பகீர் காரணம்- ஜேடியூ சரமாரி அட்டாக்!
பாட்னா: பிரதமர் மோடி நாடு தழுவிய அளவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பதற்கு காரணமே தம்மை ஓபிசி என சொல்லி வரும் பொய் அம்பலமாகிவிடும் என்பதால்தான் என திடுக்கிடும் குற்றச்சாட்டை பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக பீகார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நீரஜ்குமார் கூறியதாவது: நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதி மோத் காஞ்சி Modh Ghanchi. இந்த சமூகம் சமூக ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ பிற்படுத்தப்பட்ட ஜாதிய பிரிவுகளில் வருவது இல்லை. அப்படியான நிலையில் நரேந்திர மோடி எப்படி ஓபிசி பிரிவில் தம்மை இணைத்துக் கொள்ள முடியும்? அந்த ஜாதி எப்படி ஓபிசி பட்டியலில் சேர்ந்தது? இது தொடர்பாக ஏதேனும் சமூக அல்லது பொருளாதார ஆய்வு செய்யப்பட்டதா? அப்படி செய்திருந்தால் அந்த அறிக்கையை வெளியிடுவார்களா?

எப்படி சேர்ந்தது ஓபிசி பட்டியலில்?: 2019-ம் ஆண்டு கன்னோஜியில் பேசும் போது பிரதமர் மோடி தம்மை ஓபிசி- இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என பிரகடனப்படுத்தினார். மோடியின் ஜாதி, ஓபிசி பட்டியலில்தான் இருக்கிறதா? அறிவிக்கையை பகிரங்கப்படுத்துவீர்களா?
மோடி ஓபிசி அல்ல: பிரதமர் மோடி முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். பிரதமர் மோடியின் முன்னோர் தங்களை முற்படுத்தப்பட்ட வகுப்பினராகத்தான் அறிவித்து கொண்டார்கள். அப்படியானால் பிரதமர் மோடி தம்மை ஓபிசி என பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாரா?
பாஜகவே பதில் சொல்லட்டும்: பிரதமர் மோடியின் உண்மையான சமூகம் எந்த பிரிவின் கீழ் வருகிறது என்பது அம்பலமாகிவிடும் என்பதாலேயே ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை அவர் விரும்பவில்லை. நரேந்திர மோடி இந்த நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார்... எங்களின் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா? என்பதற்கு பாஜகதான் பதில் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி ஓபிசி ஜாதியை சேர்ந்தவரா? அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி தமது ஜாதியை ஓபிசி பட்டியலில் மோசடியாக சேர்த்தாரா? என்பதை பாஜகதான் விளக்க வேண்டும். இவ்வாறு ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
-
பீகார் முசாபர்பூர் மருத்துவமனையில் அதிகாலை தீ விபத்து.. 10 பேர் பலி.. ICU-வில் நடந்த கொடூரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications