பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா-ஆளுநரிடம் புதிய ஆட்சிக்கான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் தந்தார்!
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். பீகார் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் முதல்வர் நிதிஷ்குமார். மேலும் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார் நிதிஷ்குமார்.
Recommended Video
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஜேடியூ தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவித்தார். இதனையடுத்து பாஜக- ஜேடியூ கூட்டணியின் 2 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகினால் ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் அறிவித்திருந்தன.
பாட்னாவில் இன்று லாலு பிரசாத் யாதவ் வீட்டில் ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார். மேலும் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார். இச்சந்திப்பின் போது ஜேடியூ எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நிதிஷ்குமாருடன் ராஜ்பவன் சென்றிருந்தனர்.
பீகாரில் ஆட்சி அமைப்பதற்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். ஜேடியூ (45), ஆர்ஜேடி (80), காங்கிரஸ் (19), இடதுசாரிகள் (16) கை கோர்க்கும் நிலையில் மொத்தம் 160 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் பீகாரில் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் ஆட்சி அமைகிறது. பீகாரில் தற்போதைய நிலையில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடிய கட்சிகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications