பெண்ணை நிர்வாணப்படுத்தி.. ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. பீகாரில் அட்டூழியம்!
பெண்ணை நிர்வாணப்படுத்தி.. அடித்து விரட்டிய கொடுமை பீகாரில் நடந்துள்ளது
முசாபர்பூர், பீகார்: தன் மீதுபோலீஸில் போய் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தின் அந்தரதாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பெண். அவரை ஒரு அங்கன்வாடி ஊழியரும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூடி அடித்து உதைத்துள்ளனர். அங்கன்வாடி ஊழியரின் பெயர் லீலா தேவி. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் போலீஸில் தன்னைப் பற்றி அப்பெண் புகார் கொடுத்தது குறித்து ஆத்திரமடைந்தார் லீலா. உடனே தனது கணவர் மோத்தி மொஹதோ என்பவரிடம் இதுகுறித்துக் கூறினார். பின்னர் தனது ஆதரவு கிராமத்தினரை கூட்டிக் கொண்டு அப்பெண்ணின் வீட்டுக்குப் போயுள்ளனர். அப்பெண்ணை இழுத்து வெளியே கொண்டு வந்து சரமாரியாக அடித்தனர்.
அத்தோடு விடவில்லை. அப்பெண்ணின் உடையை அவிழ்த்து நிர்வாணமாக்கினர். அந்தப் பெண் லீலா கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் விரட்டி விரட்டி அடித்துள்ளனர். இதை சிலர் வீடியோவாக எடுக்க அது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி விட்டது. இது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications