For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி சட்டசபை தேர்தல்: அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜ.க. மாணவர் தலைவர் போட்டி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் தலைவரான நுபுர் சர்மா போட்டியிட உள்ளார்.

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 7-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள்.

கிரண்பேடி

கிரண்பேடி

பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பா.ஜ.க. செல்வாக்காக உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கேஜ்ரிவாலுக்கு எதிராக..

கேஜ்ரிவாலுக்கு எதிராக..

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி சட்டசபை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் தலைவர் நுபுர் சர்மா போட்டியிடுகிறார்.

ஜகதீஷ் முக்ஹி

ஜகதீஷ் முக்ஹி

டெல்லி முன்னாள் நிதி அமைச்சரும் பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டவருமான பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஜகதீஷ் முக்ஹி ஜனக்புரி தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணா திரத்

கிருஷ்ணா திரத்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதாவில் நேற்று இணைந்தவருமான கிருஷ்ணா திரத் படேல் நகர் தொகுதி வேட்பாளராக்கப்பட்டுள்ளார். டெல்லி முன்னாள் மேயர் ரஜ்னி ஆப்பி திமர்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக பின்னி

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக பின்னி

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்த வினோத் குமார் பின்னி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் டெல்லி பொதுப்பணித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக கிழக்கு டெல்லியின் பத்பர்கஞ்ச் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட்

சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட்

மேலும் 2013 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட எம்.எல்.ஏக்கள் அனைவருக்குமே இத்தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.

English summary
The Bharatiya Janata Party on Monday avoided a direct face off between its Chief Ministerial candidate Kiran Bedi and Aam Aadmi Party’s Arvind Kejriwal and chose instead to field Ms. Bedi from the “safe seat” of Krishna Nagar. The BJP’s student leader Nupur Sharma will take on Mr. Kejriwal in the New Delhi Assembly constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X