மோடி கூட்டத்திற்கு 10,000 டீக்கடைக்காரர்களுக்கு அழைப்பு
மும்பை: மும்பையில் நடைபெறவுள்ள நரேந்திர மோடி கூட்டத்திற்கு 10,000 டீக்கடைக்காரர்களை பாஜக அழைத்துள்ளதாம்.
டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்வதால் அதை முறியடிக்கும் வகையில் மோடி கூட்டத்திற்கு டீக்கடைக்காரரர்களை அழைக்கிறது பாஜக என்று சொல்கிறார்கள்.
டிசம்பர் 22ம் தேதி மும்பையில் மோடியின் பிரமாண்ட பிரசாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில்தான் டீக்கடைக்காரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மும்பை டீக்கடைக்காரர்களே வருக வருக
இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், மும்பையைச் சேர்ந்த 10,000 டீக்கடைக்காரர்களுக்கு மோடி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளோம். விரைவில் அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.

டீ விற்றவர் என்றால் இளக்காரமா
மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே, ஆரம்ப காலத்தில் அவர் டீக்கடையை நடத்தி வந்தார் என்பதைக் குத்திக் காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பேசி வருகின்றனர். இதற்குப் பதிலடியாகத்தான் இப்படி டீக்கடைக்காரர்களை கூப்பிடுகிறார்களாம்.

காங்கிரஸுக்கு நெத்தியடியாக இருக்கும்
இதுகுறித்து அந்த பாஜக தலைவர் கூறுகையில், டீக்கடைக்காரரர்களை நாங்கள் அழைப்பது காங்கிரஸுக்கு சரியான பதிலடியாக அமையும் என்றார்.

5000 பஸ்... 22 ரயில்கள்
இந்தக் கூட்டத்திற்காக 5000 தனியார் பேருந்துகளை பாஜக ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 20 முதல் 22 ரயில்களையும் புக் செய்யவுள்ளனராம்.

20,000 மாணவர்கள்
மேலும் இக்கூட்டத்தில் மும்பையைச் சேர்ந்த 20,000 மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளனராம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications