கருகிய “குஜராத் ஃபைல்ஸ்”.. 27 ஆண்டு ஊழல்! தலைமை செயலகத்துக்கு தீ வைத்தது பாஜகவா? காங்கிரஸ் “டவுட்”
குஜராத்: காந்திநகரில் உள்ள குஜராத்தின் பழைய தலைமை செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 27 ஆண்டுகால ஊழல் ஆதாரங்களை எரிக்க பாஜக அரசே தீ வைத்திருக்கலாம் என காங்கிரஸ் சந்தேகம் கிளப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலைநகர் காந்திநகரில் உள்ள குஜராத் மாநில பழைய தலைமை செயலகத்தில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பிளாக் எண் 16ல் ஏற்பட்ட தீயின் காரணமாக முக்கிய ஆவணங்கள், அலுவலக உபயோக பொருட்கள், நகர்புற வளர்ச்சித்துறை அலுவலகம் முழுவதும் தீயில் கருகின. விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

காங்கிரஸ் புகார்
இரண்டரை மணி நேரமாக பற்றி எரிந்த தீயின் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகாரை முன்வைத்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தீ விபத்து வீடியோவுடன் ஒரு ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது.

27 ஆண்டு ஊழல்
அதில், "அரசாங்கத்தின் ஆவணங்கள் குஜராத்தில் எரிந்து வருகின்றன. குஜராத்தில் பழைய தலைமைச் செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு இந்த ஆவணங்கள் எரிந்துள்ளது, பாஜக ஆட்சிக்கு வருவதை ஏற்கனவே அறிந்திருப்பதை விளக்குகிறது. இந்த பரபரப்பில் 27 ஆண்டுகால ஊழல் ஆவணங்கள் எல்லாம் தீயில் கருகிவிட்டன." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேண்டுமென்றே நடந்ததா?
இதுகுறித்து தேசிய இளைஞரணி தலைவர் பிவி ஸ்ரீனிவாசும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தீ விபத்தில் கருகிய ஆவணங்கள்தான் 27 ஆண்டுகால ஊழலின் ஆதாரங்கள். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் குஜராத்தின் பழைய தலைமை செயலகமாகும். அங்குதான் அரசின் ஆவணங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது எதேர்ச்சையாக நடைபெற்றதா அல்லது வேண்டுமென்றே செய்தார்களா?

சட்டமன்றத் தேர்தல்
குஜராத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அடிக்கடி அங்கு சென்று வருகின்றனர். பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை சமீப நாட்களில் மோடி தொடங்கி வைத்துள்ளார். நேற்று குஜராத்தில் பேசிய அமித்ஷா, "காங்கிரஸ் வாக்காளர்களை சாதி அடிப்படையில் பிரிக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ் வளர்ச்சித் திட்டங்களை செய்ததில்லை. சாதி அரசியல் செய்தி ஆட்சியை பிடிக்கும்." என சாடினார்.












Click it and Unblock the Notifications