குறை கேட்கச் சென்றபோது தவறி சாக்கடையில் விழுந்த பாஜக பெண் எம்.பி... மருத்துவமனையில் அனுமதி
ஆமதாபாத்: குஜராத் மாநில பாஜக எம்.பி.யான பூனம்பென், தனது தொகுதி குடிசை வாழ் மக்களிடம் குறை கேட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் நின்றிருந்த சிலாப் இடிந்து சாக்கடையில் விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் சிட்டி தொகுதி பாஜக எம்.பி. பூனம் பென். இவர் இன்று தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட ஜலராம் பகுதியில் உள்ள குடிசைகளைப் பார்வையிடச் சென்றார். அப்போது சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பூனம் பென்னிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் நின்றிருந்த சிலாப் இடிந்து விழுந்தது. இதில், சுமார் 10 அடி ஆழமுள்ள சாக்கடையில் பூனமும், அவருடன் வந்திருந்த சில அதிகாரிகள் மற்றும் தொண்டர்கள் விழுந்தனர்.
இதில், பூனமுக்கு தலை, கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பூனம் உட்பட சாக்கடையில் விழுந்த அனைவரையும் மீட்ட அப்பகுதி மக்கள், அவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications