சிஏஏ-வை விமர்சிக்க.. இந்திய எல்லை குறித்து சர்ச்சையை கிளப்பிய மமதா பானர்ஜி! வெளுத்து வாங்கும் பாஜக
கொல்கத்தா: சிஏஏ அமல்படுத்தப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளவில்லை என்று மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார். இவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.

இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்தச்சட்டம் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் என எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை விமர்சித்துள்ளன. இந்த சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை தற்போது வழங்கப்படாது என்பதால், தமிழ்நாட்டில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளவில்லை என மமதா பானர்ஜி கூறியுள்ளார். அதாவது, "வங்கதேசம், பாகிஸ்தானை போல ஆப்கானிஸ்தான் நமது நாட்டுடன் எல்லைகளை பகிர்ந்துக்கொள்ளவில்லை. இஸ்லாமியர்களை தவிர்த்து மற்ற மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதை ஏற்க முடியாது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதி, வடக்கு காஷ்மீர் எல்லையுடன் இணைந்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் வரைபடத்தில், ஆப்கானிஸ்தானுடன் இணைந்திருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, பாகிஸ்தானை பொறுத்தவரை, இந்தியா ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளவில்லை.
இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் தேச விரோதிகள் என்று பாஜக தொடர்ந்து கூறிவரும் நிலையில், மமதாவின் ஆப்கானிஸ்தான் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மமதாவின் கருத்து தவறானது மட்டுமல்ல, அது தேசவிரோதமானது என்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணியில் இக்கட்சி இடம்பெற்றிருந்தாலும், மாநிலம் என்று வந்துவிட்டால் தனித்துதான் போட்டி என்று கறார் காட்டியுள்ளது. எனவேதான் காங்கிரசுடன் எந்த தொகுதி பங்கீட்டையும் செய்துக்கொள்ளவில்லை.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இப்படி இருக்கையில் மமதாவின் கருத்தை தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக கையில் எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications