குஜராத் தேர்தல் களத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய பாஜகவின் மதவாத போஸ்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் களத்தில் மதவாதத்தை கக்கும் போஸ்டரை பகிரங்கமாக வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாஜக.

குஜராத் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தில் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றும் பாஜகவின் வாக்கு வங்கியாகவும் இருந்த பட்டேல் சமூகத்தினர் இம்முறை காங்கிரஸை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். இதனால் குஜராத்தில் பாஜக ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைக்குமா? என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

பாஜகவின் போஸ்டர்

பாஜகவின் போஸ்டர்

இந்நிலையில் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் மதவாத பிரசாரத்தை பகிரங்கமாகவே கையிலெடுத்திருக்கிறது பாஜக. RAM/ HAJ என்ற பெயரில் யாரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? என ஒரு போஸ்டரை பாஜக வெளியிட்டுள்ளது.

பாஜகவின் புது கண்டுபிடிப்பு

பாஜகவின் புது கண்டுபிடிப்பு

இந்த போஸ்டரில் RAM என்பதற்கு அர்த்தமாக குஜராத் முதல்வர் ரூபானி; பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் இந்து கோவிலையும் ராமர் படத்தையும் இணைத்துள்ளனர்.

பாஜகவின் அர்த்தம்

பாஜகவின் அர்த்தம்

இதே போஸ்டரில் HAJ என்பதற்கு அர்த்தமாக காங்கிரஸை ஆதரிக்கும் ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர், தலித் தலைவரான ஜிக்னேஷ் ஆகியோரை குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவர்கள் படங்களை ஒட்டி மெக்கா மதினாவில் உள்ள மசூதி படத்தையும் இணைத்துள்ளனர்.

போஸ்டரால் சர்ச்சை

போஸ்டரால் சர்ச்சை

இப்போஸ்டரில் RAM பகுதியில் பாஜகவின் தாமரையும் HAJ பகுதியில் காங்கிரஸின் கை சின்னமும் அச்சிடப்பட்டுள்ளது. காங்கிரஸை இந்துக்கள் ஆதரிக்கக் கூடாது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் வெளிப்படையாக பிரசாரம் செய்யும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது. பாஜகவின் இந்த போஸ்டருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP 's poster has created a flutter in Gujarat assembly election campaign. Congress has come down heavily on this poster.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற