டெல்லி தோல்வியும்... 2004ல் "ஒளிர்ந்த இந்தியாவும்"... ஒரு சோக பிளாஷ்பேக்!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தோற்ற விதத்தைப் பார்க்கும்போது 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி சந்தித்த பெரும் தோல்விதான் நினைவுக்கு வருகிறது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்கள் பாஜகவை விரட்டி விரட்டி அடித்த செயல் இன்னும் நாட்டு மக்களால் நம்ப முடியவில்லை. எப்படி இப்படித் தோற்றது பாஜக என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
ஆனால் பாஜக தோற்றதற்கு வேறு யாரும் காரணமல்ல, அவர்களே காரணம் என்பது உற்று நோக்கினால் தெரியும். மக்களிடம் பாஜக மீது நிறைய அதிருப்திகள் உள்ளன. இதுதான் டெல்லி சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்து விட்டது.
இந்த நேரத்தில் நமக்கு 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்தான் நினைவுக்கு வருகிறது.

இடைத் தேர்தல் வெற்றியை நம்பி
2003ம் ஆண்டு கடைசியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. அதில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றது. அப்போது மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தேசியக் கூட்டணி அரசு பதவியில் இருந்தது. சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டது பாஜக.

கையில் எடுத்த தவறான பிரசாரம்
இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக ஒரு புதிய பிரசார உத்தியையும் கையில் எடுத்தது. அதுதான் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம்.

அப்படியே எதிராக திரும்பிய கோஷம்
ஆனால் இந்த இந்தியா ஒளிர்கிறது கோஷத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்படியே தங்களுக்குச் சாதகமாக திருப்பின. பாஜக ஆட்சியின் அலங்கோலங்களை அவர்கள் வெட்ட வெளிச்சமாக்கி பிரசாரம் செய்ததால், இந்தியா ஒளிர்கிறது என்ற பாஜகவின் கோஷம் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனது.

மோடியைப் போல வாஜ்பாயை முன்னிறுத்தி
எப்படி மோடி பதவிக்கு வந்த பிறகு அவரை முன்னிறுத்தி ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்ததோ பாஜக, அதேபோல அந்தத் தேர்தலில் வாஜ்பாய் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டது பாஜக. ஆனால் மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டனர். பெரும் தோல்வியைப் பரிசாக கொடுத்து விட்டனர்.

தப்புத்தான்... ஒப்புக் கொண்ட அத்வானி
தேர்தல் தோல்விக்குப் பின்னர் கருத்து தெரிவித்த எல்.கே.அத்வானி, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது தவறுதான் என்று ஒப்புக் கொண்டார். அதீத நம்பிக்கையில் கட்சி இருந்து விட்டதாகவும் அவர் கூறினார். மேலும் 2002ல் நடந்த குஜராத் கலவரங்களும் சேர்ந்து கட்சியை 2004 தேர்தலில் பதம் பார்த்து விட்டன.

மீண்டும் அதேபோல ஒரு அடி
தற்போது டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் கிட்டத்தட்ட அதேபோன்றதொரு அடியை பாஜக வாங்கியுள்ளது. அதீத நம்பிக்கை, மோடி உள்ளிட்ட பாஜகவினரின் எதிர்மறைப் பிரசாரம், நாட்டையே மோடி அரசு வளப்படுத்தி விட்டது போன்று ஏற்படுத்தப்பட்ட பிரமை, மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாமல் கெஜ்ரிவாலை மட்டும் குறி வைத்து தாறுமாறாகப் பிரசாரம் செய்தது, ஆப் கி பார் மோடி சர்க்கார் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசியது என எல்லாம் சேர்ந்து பாஜகவை படுகுழியில் தள்ளி விட்டது.

என்ன நடக்குதுன்னே தெரியாமல்
மக்கள் மத்தியில் என்ன நடக்கிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள், நாம் என்ன செய்கிறோம், மக்கள் கோரிக்கைகள் என்ன, மக்கள் பிரச்சினை என்ன, உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து பாஜக ஒருபோதும் கண்டு கொள்வதே இல்லை. அந்தத் தவறுக்காக இப்போது டெல்லியில் தண்டிக்கப்பட்டுள்ளது பாஜக - மீண்டும் ஒருமுறை.

எதற்கெடுத்தாலும் மோடி என்றால் எப்படி
எல்லாவற்றுக்கும் மோடியை மட்டுமே நம்பி வேலை பார்ப்பது, எதற்கெடுத்தாலும் மோடி முகமூடியைக் கொண்டு வந்து மக்கள் முன் வைப்பது என்று பாஜக தன்னிச்சையாக செயல்படுவதும் அக்கட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்க இன்னொரு முக்கியக் காரணம்.

உலகத்திலேயே இல்லாத தலைவர் போல
என்னவோ உலகத்திலேயே மோடியைப் போல ஒரு தலைவர் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை என்பது போல பாஜகவினர் நடந்து வரும் மக்களை எரிச்சல்படுத்தி விட்டது. இன்னும் சொல்லப் போனால், மோடி மீது பிரியம் வைத்திருந்தவர்கள் கூட அட என்னங்கய்யா இது என்று அதிருப்தி அடையும் அளவுக்கு பாஜகவினரின் சர்வாதிகார எண்ணம் அதீதமாக இருந்து வருகிறது. இதை பாஜக நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அலட்சியம்.. பல பிரச்சினைகளின் தாயகம்
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications