பெண்ணை நாயுடன் ஒப்பிட்ட பாஜக செய்தித்தொடர்பாளர்.. பிரபல நடிகை கோபம்.. விளாசல்
டெல்லி: பெண்ணை நாயுடன் ஒப்பிட்டு வம்பில் சிக்கியுள்ளார் பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஒருவர். டுவிட்டரில் அவரது கருத்துக்கு பெண்ககள் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
சில நாட்கள் முன்பாக, குஜராத்தை சேர்ந்த சாமியார், கிருஷ்ணவரூப் தாஸ்ஜி, பேசிய ஒரு சர்ச்சை பேச்சு இணையத்தில் வைரலானது. அவர் தனது உரையின்போது, மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் செய்ய கூடாது. அப்படி சமையல் செய்து, கணவருக்கு உணவு கொடுக்கும் பெண்கள், அடுத்த பிறவியில் விபச்சாரிகளாகத்தான் பிறப்பார்கள் என கூறினார்.

மாதவிடாய் என்பது உடலியல் ரீதியான ஒரு விஷயம் மட்டுமே, அதை அவமதித்ததோடு, பெண்களையும் அவதூறு செய்யும் பேச்சு என சமூக வலைத்தளங்களில் கண்டன கருத்துக்கள் எழுந்தன.
இந்த நிலையில், பாஜக செய்தித்தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால், சமூக வலைத்தங்களை பயன்படுத்தக்கூடிய பெண்களை நாய்கள் என பொருள்படும் வகையில், ஒரு கருத்தை கூறி வம்பில் சிக்கியுள்ளார். மாதவிடாய் காலத்தில் உணவு சமைத்ததால், இந்த பிறவியில் நாய்களாக பிறந்துள்ளவர்கள் இவர்கள்தான என கூறி தான் வளர்க்கும் 2 பெண் நாய்களை டுவிட்டரில் போட்டோவாக வெளியிட்டிருந்தார், ஷுனாலி குல்லர் ஷரோப் என்ற பெண்.
இந்த டுவிட்டுக்கு பதிலளித்து இதில் எந்த நாய் நீங்க? என கேள்வி எழுப்பியிருந்தார் கோபால் கிருஷ்ணா. இந்த கமெண்ட்டை வைத்து விளாசி தள்ளுகின்றனர் டுவிட்டர் பெண்கள். ஸ்வரா பாஸ்கர் என்ற பிரபல பாலிவுட் நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில், பொது இடத்தில் பெண்ணை அவமரியாதை செய்கிறார், பாஜக செய்தித்தடர்பாளர். அகர்வால் தனக்குத்தானே அவமானப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனால் இதையெல்லாம் கோபால் கிருஷ்ணா கண்டுகொள்ளவில்லை. நான் ஒரு உண்மையான இந்து, இப்படித்தான் நான் கருத்து கூற முடியும் என தெரிவித்துள்ளார்.
பொதுவாக பாலிவுட் நடிகர், நடிகைகள், அரசியல் கருத்து கூறுவது இல்லை. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், முன்னணி நடிகை தீபிகா படுகோன் பங்கேற்று புது விதையை தூவினார். இப்போது வளர்ந்துவரும் மற்றொரு பிரபல நடிகையும், பாஜகவுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications