ராம்நாத் கோவிந்த் தேர்வை விமர்சனம் செய்த பெண் நிருபர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போட்ட பாஜக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசு தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்வை விமர்சனம் செய்த பெண் பத்திரிகையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் புகார் பதிவு செய்துள்ளார் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா.

ஆங்கில இதழில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ராணா அயூப், ராம்நாத் கோவிந்த் நியமனத்தை பிரதீபா பாட்டிலோடு ஒப்பிட்டு கூறியிருந்தார். பிரதீபா பாட்டிலை மோசமான தேர்வு என கூறினார்களே என்ற அர்த்தத்தில் அவர் டிவிட் செய்திருந்தார்.

BJP spokesperson files complaint against journalist for criticising Ram Nath Kovind

ராம்நாத்கோவிந்த் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால், இதை வன்கொடுமை சட்டம் (1989)ன்கீழ் புகாராக பதிவு செய்துள்ளார் பாஜக செய்தித்தொடர்பாளர் நிபுர் ஷர்மா. இதை டிவிட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதற்கு ராணா அயூப் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். எனவே யாராக இருந்தாலும் ராம்நாத் கோவிந்த் தேர்வு குறித்து விமர்சனங்கள் செய்வது தடுக்கப்ப்டடுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
"Filed a complaint against Journalist Rana Ayyub under SC/ST Act, 1989 for her derogatory tweet about RamNath Kovind", says Nupur Sharma.
Please Wait while comments are loading...