ஆசை ஆசையா இருக்குது பாஜக.. பொசுக்குனு நம்ம ஸ்டாலினை சொல்லி.. கனவை நொறுக்கிட்டாங்களே மம்தா! என்னாகுமோ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகள் எகிறி கொண்டிருக்க, எக்ஸிட் போல் குறித்து மம்தா பானர்ஜி தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.. இந்த முறையும் மேற்கு வங்கத்தில், மும்முனை போட்டியே நிலவியது... திரிணாமுல் காங்கிரஸ் வழக்கம்போல், மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அதேபோல பாஜகவும் தனித்து போட்டியிட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில், சிபிஎம், காங்கிரஸ், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ் கட்சி, சிபிஐ நிறைந்திருந்தன.. இதில் சிபிஎம் 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
எக்ஸிட் போல்: இந்த முறை வெளியான எக்ஸிட் போல்களில், பெரும்பாலும், பாஜகவே பிரதான இடத்தை பிடிக்கும் என்ற கணிப்புகள் வெளியாகியிருந்தன.. குறிப்பாக, ஏபிபி -C வோட்டர் எக்ஸிட் போலில், பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் 13 முதல் 17 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது...
அதேபோல, இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி ஒன்று முதல் மூன்று இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதுபோல, பிரதான எக்ஸிட் போல்களிலும், பாஜகவே அதிக இடத்தை பெறும் என்று கூறப்பட்டுள்ளன. இந்த கணிப்புகளையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி ஒன்றை தந்துள்ளார்..
வாக்குப்பதிவு: அதில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த கணிப்புகள் எல்லாம் 2 மாதங்களுக்கு முன்னாடியே, வீட்டில் உட்கார்ந்து தயாரிக்கப்பட்டவை... அதனால்தான், கள நிலவரத்துடன் அவை எதுவுமே ஒத்துப்போகவில்லை. கடந்த 2016, 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் எப்படி நடத்தப்பட்டன என்பதையெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
அப்போது, அந்த கருத்து கணிப்புகள் எல்லாம் போலியானவை என்பதை தேர்தல் முடிவுகள் வெட்ட வௌிச்சமாக்கியிருந்தது.. இந்தியா கூட்டணியில் முக ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரது கட்சிகள் சிறப்பான வெற்றியை பெறும்...
நம்பிக்கை: மாநில கட்சிகளுக்கு எல்லா இடங்களிலும் நல்ல வெற்றியே கிடைக்கும்" என்று அடித்து சொல்லியிருக்கிறார் மம்தா பானர்ஜி.. உண்மையிலேயே எக்ஸிட் போல் கணிப்புப்படி, பாஜக முந்திக்கொண்டு போகுமா? அல்லது மம்தாவின் நம்பிக்கை வெற்றி பெறுமா? என்பது நாளைக்கு தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்..!!
தேசபந்து நாளிதழின் டிஜிட்டல் சேனல் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கிறது.. இதில், இந்தியா கூட்டணிக்கு 255 முதல் 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாஜகவின் என்டிஏ கூட்டணி 207 முதல் 241 தொகுதிகளை மட்டுமே பெறும் என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவானது, பாஜகவினருக்கு அதிர்ச்சியையும், காங்கிரஸ் உள்பட 'இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மகிழ்ச்சியையும் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications