சாலையில் கண்டெடுத்த வெடிகுண்டு... புத்தகப் பையில் மறைத்து வைத்தபோது வெடித்து 8 வயது மாணவர் பலி !
ரூர்கீ: சாலையில் கண்டெடுக்கப் பட்டு, பாட புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் பள்ளி மாணவர் பலியான சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கீ ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்று கீழே கிடந்துள்ளது. அதனை அவ்வழியே சென்ற 8 வயது பள்ளி மாணவர் ஒருவர் கண்டுள்ளார். விபரீதத்தை உணராமல், அக்குண்டை எடுத்து தனது பாடப்புத்தக பையில் மறைத்து எடுத்துச் சென்றுள்ளார் அம்மாணவர்.

பள்ளி வளாகம் அருகே சென்ற போது திடீரென அக்குண்டு வெடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அம்மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் கூறுகையில், "பள்ளி மாணவன் பலியானது மிகுந்த வருத்தத்தினை ஏற்படுத்துகிறது. இந்த குண்டு வெடிப்பு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவு இடப் பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே பள்ளி அருகே குப்பைத் தொட்டியில் கிடந்த வெடிகுண்டு வெடித்ததில் மாணவர் பலியானதாகவும் வேறு ஒரு தகவல் கூறுகின்றது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications