மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி- 9 பேர் படுகாயம்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் சைக்கிள் குண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பாஜ்ரபாராவில் உள்ள பள்ளி அருகே நேற்று இரவு திடீரென சைக்கிளில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 9 பேர் ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கே.எல்.ஒ எனப்படும் கம்தாபூர் விடுதலை அமைப்பு, கம்தாபூர் தனி மாநிலம் கோரி கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை கே.எல்.ஒ. அமைப்பு நடத்தி இருக்கலாம் என அம்மாநில போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய ஜல்பைகுரி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications