கர்நாடக தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு.. போலீசுக்கே போன் போட்டு மிரட்டிய மர்ம நபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைமைச் செயலகமான விதானசவுதாவிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், சோதனைகளுக்கு பிறகு அது வதந்தி என்று தெரியவந்தது.

இன்று மதியம் விதானசவுதாவிலுள்ள காவல் நிலையத்தை நாகராஜ் என்று சொல்லிக்கொண்ட ஒரு நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, விதானசவுதாவிற்குள் வரும் 25ம் தேதிக்குள் குண்டு வைப்போம் என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

Bomb threat at Bengaluru Vidhana Soudha

இதையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தினர். பல மணி நேரம் மோப்ப நாய்கள் உதவியோடும், உபகரணங்களுடனும் நடத்தப்பட்ட இந்த சோதனை முடிவில், வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அந்த மிரட்டல் போலியானது என்று தெரியவந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A telephone call to Vidhana Soudha Police Station in Bengaluru with a threat to blow Vidhan Soudha in flames.
Please Wait while comments are loading...