பவுன்சர்ஸ், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. பாஜகவுக்கு சவால்விடும் காங்.,மஜத பலே ஏற்பாடுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குதிரை பேரத்தை தடுக்க ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்ட எம்எல்ஏக்கள்!

  சென்னை: காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக, தனியாக பாதுகாப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

  கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், பாஜகவிற்கே ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

  இதனால் தற்போது கர்நாடகாவில் குதிரை பேரம் நடக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் எப்படியாவது தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள முடிவெடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

  எங்கே

  எங்கே

  இப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் சரியாக 9 மணிக்கு ஹைதராபாத் சென்றுள்ளனர். தெலுங்கானாவில் உள்ள பார்க் ஹயாட் சொகுசு விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எல்லோரும் காரில் வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 30க்கும் அதிகமான காரில் அவர்கள் வந்துள்ளனர். மஜத எம்எல்ஏக்கள் பேருந்தில் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

  சர்மா டிராவல்ஸ்

  சர்மா டிராவல்ஸ்

  பேருந்தில் வருவதால், இன்னும் சில 2 மணி நேரத்தில் மஜத எம்எல்ஏக்கள் அதே பகுதிக்கு வந்து விடுவார்கள். ஒரு இரவு முழுக்க பாஜகவிற்கு பயந்து இவர்கள் ஊர் ஊராக சுற்றியுள்ளனர். இவர்கள் மொத்தம் சர்மா டிராவல்ஸ், ஆரஞ்ச் டிராவல்ஸ், எஸ்ஆர்எஸ் டிராவல்ஸ் ஆகிய 3 பேருந்துகளில் வந்து இருக்கிறார்கள். இவர்கள் பேருந்திற்கு முன்னும் பின்னும் மொத்தம் 7 கார் பாதுகாப்பிற்கு சென்றுள்ளது. பாஜகவினர் பிரச்சனை செய்ய கூடாது என்பதால் இப்படி செய்துள்ளனர்.

  இல்லை

  இல்லை

  ஏற்கனவே கர்நாடக மாநில அரசு இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறியது. பெங்களூரில் அவர்கள் தங்கி இருந்த ஈகிள்டன் ஹோட்டலில் பாதுகாப்பை திரும்ப பெற்றனர். இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநில அரசு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்துள்ளது. 1000க்கும் அதிகமான மாநில போலீஸ் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு ஹோட்டலுக்கு வெளியேயும் உள்ளேயும் நிறுத்தப்பட்டுள்ளது.

  தனியார் பாதுகாப்பு

  தனியார் பாதுகாப்பு

  நேற்று இரவு முழுக்க இவர்கள் பயணித்த போது, 7 காரிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு வீரர்கள் சென்றுள்ளனர். அதேபோல் பவுன்சர்ஸ் எனப்படும் குண்டு கட்டாக தூக்கி எறியும் பாதுகாப்பு நபர்களும் நூற்றுக்கணக்கில் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் இந்த பணிகளை மேற்பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress leader, D K Shivakumar hires bouncers and gunmen from Bengaluru to safeguard the Congress and JD(S) MLAs

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற