காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மீண்டும் கொண்டுவாங்க.. எவரெஸ்டில் ஏறுபவர்களிடம் நேபாளம் வேண்டுகோள்
காத்மண்டு: கொரோனா நோயில் இருந்து மக்களை காக்க உதவும் உங்கள் வெற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மீண்டும் கொண்டு வாருங்கள் என எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கு நேபாள அரசு வலியுறுத்தி உள்ளது.
நேபாளத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மிகக் குறைவாக உள்ளது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களிடம் அந்நாட்டு அரசு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது எவரஸ்ட் சிகரத்தில் மலை ஏறுபவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் தான் செல்வார்கள்.அவர்கள் மலை ஏறிவிட்டு திரும்ப கீழே இறங்கும் போது ஒரு கட்டத்தில் காலி சிலிண்டர்களை மலை சரிவுகளிலேயே போட்டுவிட்டு வருவார்கள்,

இனி மலை சரிவுகளில் சிலிண்டர்களை தூக்கிப்போடாமல் அவற்றை தங்களிடம் மலை ஏறுபவர்கள் ஒப்படைக்க வேண்டும் என நேபாள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேபாளத்தில் உள்ள 16 இமயமலை சிகரங்களில் ஏறுவதற்கு 700 க்கும் மேற்பட்ட மலை ஏறுபவர்களுக்கு நேபாளம் அனுமதி வழங்கி இருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏப்ரல்-மே மாதங்களில், மலையேறுதல் மற்றும் சுற்றுலாவை நடத்தி வரும் நேபாளம். கொரோனாவை சமாளிக்க மலையேறுதல் சங்கத்தினரிடம் காலி சிலிண்டர்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது,
பலவீனமான சுகாதார கட்டமைப்பு உள்ள நேபாளம், இப்போது கொரோனாவால் மோசமான நிலையை எட்டி உள்ளது. அதன் அண்டை நாடான இந்தியாவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினசரி மிக அதிக அளவு உயர்த்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கோடைகால பருவத்தில் மலை ஏறுபவர்களும், அவர்களுக்கு வழி காட்டுபவர்களும், 3,500 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் சென்றதாக நேபாள அரசு மதிப்பிட்டுள்ளது. இந்த சிலிண்டர்களை காலியான பின்ன பெரும்பாலும் பனிச்சரிவுகளில் தூக்கி போடப்படுகின்றன. இவற்றை மலை ஏறுபவர்களும் ஷெர்பாக்களும்(வழிகாட்டுபவர்கள்) திரும்பக் கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது நேபாளம்.
ஏனெனில் அவற்றில் மீண்டும் ஆக்ஸிஜனை நிரப்பி கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த முடியும் என்கிறார் அந்நாட்டின் மூத்த மருத்துவ அதிகாரி.
ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் நேபாளத்தில் 8,777 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.இது ஏப்ரல் 9 ஆம் தேதி பதிவான எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாகும்.
காத்மாண்டுவில் உள்ள பல தனியார் மற்றும் சமூக மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மேலும் நோயாளிகளை அழைத்துச் செல்ல முடியாது என்று கூறியுள்ளன. ஆக்ஸிஜன் மற்றும் சிலிண்டர் இரண்டிற்கும் பற்றாக்குறை உள்ளது. மக்கள் இறப்பதில் இருந்து காப்பாற்ற எங்களுக்கு உடனடியாக 25,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை. இது எங்கள் அவசர தேவை "என்று சுகாதார அமைச்சின் அதிகாரி சமீர் குமார் கூறினார்.
எங்களுக்கு அவசரமாக 20,000 சிலிண்டர்களை அனுப்புமாறு நேபாளம் சீனாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ பொருட்களை வழங்க சீனா உறுதியளித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி தெரிவித்தார்.
3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நேபாள நாட்டில் 1,600 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மற்றும் 600 க்கும் குறைவான வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன என்று ஆக்சன் ஏய்ட் நேபாளம் தெரிவித்துள்ளது.'
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications