பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்த எடியூரப்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா!

  சென்னை: கர்நாடகத்தின் முதல்வராக பதவியேற்ற 6 மணிநேரங்களில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

  கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மையில்லாவிட்டாலும் தனிபெரும்பான்மை என்று கூறி பாஜக தகிடுதத்தம் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டது. எனினும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 15 நாட்கள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

  BSY transfers 4 IPS officers within hours of taking oath

  இவர் பதவியேற்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பதவியேற்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து இன்று காலை முதல்வராக எடியூரப்பா மட்டும் பதவியேற்றுக் கொண்டார். ஏனைய அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

  பச்சை துண்டு அணிந்து கொண்டு விவசாயிகள் மற்றும் கடவுள் மீது ஆணையிட்டு உறுதிமொழியேற்றார். இந்நிலையில் காங்கிரஸ் ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  எடியூரப்பா பதவியேற்ற 6 மணி நேரங்களில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறுகையில் ரயில்வே கூடுதல் டிஜிபியாக இருந்த அமர்குமார் பாண்டே இனி புலனாய்வுத் துறை ஏடிஜிபியாக மாற்றப்பட்டார்.

  அதுபோல் கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் துணை ஐஜிபியாக இருந்த சந்தீப் பாட்டீலை புலனாய்வு துறை துணை ஐஜிபியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதுபோல் பிதார் மாவட்ட எஸ்பி.யாக இருந்த எஸ்.தேவராஜா பெங்களூர் நகரத்தின் துணை ஆணையராகவும், பெங்களூரு ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த கிரீஷ் பெங்களூரு நகர வடகிழக்கு பகுதியின் துணை ஆணையராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Four IPS officers have been transferred by Chief Minister B.S. Yeddyurappa within 6 hours of taking oath.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற