For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மந்திரமாவது! மாயமாவது!...எல்லாம் மனநோய்தான்... புராரி வழக்கில் உளவியல் நிபுணர் உதவியை நாடும் போலீஸ்

டெல்லி புராரியில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாமியாரின் தூண்டுதல் ஏதும் இல்லை என்ற முடிவில் போலீஸார் உள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    புராரி வழக்கில் உளவியல் நிபுணர் உதவியை நாடும் போலீஸ்- வீடியோ

    டெல்லி: டெல்லி புராரியில் 11 பேர் பலியான சம்பவத்தில் மனநோய்தான் காரணம் என்றும் சாமியாரின் தூண்டுதல்கள் ஏதும் இல்லை என்றும் போலீஸார் கருதுகின்றனர்.டெல்லி புராரியில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பினர்.

    அதில் இவர்கள் எவ்வித போராட்டமுமின்றி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வீட்டில் சோதனை நடத்தியதில் அமானுஷயமான விஷயங்கள் கிடைத்தன. இரு நோட்டுபுத்தகங்களில் இறைவனை காண்பது எப்படி என்ற தலைப்பில் தற்கொலை குறித்த திட்டத்தின் குறிப்பு இருந்தது.

    விசாரணை

    விசாரணை

    அதுவும் யாரோ ஒருவர் கட்டளையை பிறப்பித்தால் எப்படி இருக்குமோ அதுபோல் இருந்தது. இதனால் ஏதேனும் மாந்த்ரீகர்களின் வேலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் போலீஸார் 11 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாமியார் இல்லை

    சாமியார் இல்லை

    இந்நிலையில் போலீஸாருக்கு 3-ஆவதாக புத்தகம் ஒன்று கிடைத்துள்ளது. அதிலும் இறைவனிடம் செல்வது, சூன்யா, கடவுளை திருப்திப்படுத்துவது உள்ளிட்ட குறிப்புகள் இருந்தன. இதனால் இந்த தற்கொலைக்கு பின்னால் சாமியார் இருப்பதை போலீஸார் மறுக்கின்றனர்.

    பகிரப்பட்ட மனநோய்

    பகிரப்பட்ட மனநோய்

    இது முழுக்க முழுக்க மனநோய் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மனநோய் மருத்துவரின் உதவியை போலீஸார் நாடுகின்றனர். இதுதொடர்பாக மூத்த மருத்துவர் ஒருவரிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசினார். அப்போது இதுபோன்ற மனநோய்க்கு பெயர் பகிரப்படும் மனநோய் என்றார்.

    அமானுஷ்யங்கள்

    அமானுஷ்யங்கள்

    ஒருவர் கற்பனையில் நம்பும் விஷயத்தை மற்றவர்களையும் நம்ப வைப்பது ஆகும். அதுபோல் நாராயணின் மகன் லலித் கடவுளை பார்க்கலாம், இறந்த தந்தையை பார்க்கலாம் என்று சொல்லி அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இவர்களது உறவினர்களும் இவர்களுக்கு அமானுஷ்யங்களில் நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர்.

    English summary
    Delhi Police ruled out the Godman in this tragedy. They says its all of psycosis. Police seeks Psychiatrist help in this case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X