இடைத்தேர்தல் நடைபெற்ற 3 லோக்சபா தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி முகம்..வீடியோ

  லக்னோ/ பாட்னா: கோராக்பூர், புல்பூர், அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு மரண அடி கிடைத்துள்ளது. எனினும் பீகாரின் பஹாபூவா சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

  உ.பி.யில் கோராக்பூர், புல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர் , மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.

  எனவே காலியாக உள்ள இந்த இரு லோக்சபா தொகுதிகளுக்கும், பீகாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

  துணை முதல்வர்

  துணை முதல்வர்

  இத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. பீகாரில் ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்து நிதிஷ்குமார் முதல்வரானார். துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டார்.

  பாஜக கூட்டணி

  பாஜக கூட்டணி

  இந்நிலையில் மாட்டு தீவன ஊழல் வழக்கில் தேஜஸ்வியின் பெயர் அடிபட்டத்தை தொடர்ந்து அவரை பதவி விலகுமாறு நிதிஷ் கோரினார். அவர் விலகாததை அடுத்து தான் விலகுவதாக கூறி அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி ஒரே நாள் இரவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை தக்க வைத்தார்.

  பாஜக தோல்வி

  பாஜக தோல்வி

  இந்த நிலையில் இன்றைய தினம் மேற்கண்ட 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கோராக்பூர், புல்பூர் , அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு மரண அடி கிடைத்துள்ளது. புல்பூர் லோக்சபா தொகுதியில் 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது

  கோரக்பூரில் தோல்வி

  கோரக்பூரில் தோல்வி

  பீகாரின் பஹாபூவா சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரிங்கி ராணி பாண்டே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜகனாபாத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை எம்பியான கோரப்பூர் தொகுதியில் பாஜக பெரும் தோல்வி அடைந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Poll counting starts for Byelection in UP and Bihar.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற