டிடிவி தினகரன் விஷயத்தில் தேர்தல் ஆணையம் தவறான முடிவை எடுத்துள்ளது- சுப்ரமணியசாமி பாய்ச்சல்
இரட்டை இலை சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில்,டிடிவி தினகரன் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தவறான முடிவு என்று பாஜக மூத்த தலைவர்சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: டி.டி.வி. தினகரன் உண்மையிலேயே தேர்தல் ஆணையத்தில் யாருக்காவது லஞ்சம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார் என்றால் அது குறித்து தீவிரமாக விசாரித்து சட்டம்
தன்னுடைய கடமையை ஆற்ற வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் 'பொர்க்கி புகழ்' சுப்ரமணியசாமி கூறியுள்ளாள்
டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுப்ரமணியசாமி, "லஞ்சம் தொடர்பான டெல்லி போலீசார் விசாரணையின்போது, தினகரன் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக
தெரியவந்தால் அதற்கான சட்டவிதிகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொடர்புபடுத்தக் கூடாது
ஆனால் குற்றப்பிரிவு அந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷனுடன் இணைக்கக் கூடாது. டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய சகாக்கள் ஹவாலா குற்றச்சாட்டில்
ஈடுபட்டிருந்தால் டெல்லி போலீசார் தேர்தல் கமிஷனுக்கும் இந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பையும் ஏற்படுத்தக் கூடாது.

என்ன வழக்கு? புரியவில்லை
என்னால் இன்னும் இந்த வழக்கை முழுதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இது தேர்தல் ஆணையத்தில் யாருக்கோ லஞ்சம் அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கா?
அப்படி என்றால் சசிகலா பொதுச்செயலாளராகவும், டி.டி.வி. தினகரன் துணைப்பொதுச்செயலாளராகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எப்படி முடிவு எடுத்தது?

லஞ்சக் குற்றச்சாட்டு
இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் தராமல் தேர்தல் ஆணையம் எதற்கு அதை முடக்க வேண்டும்? சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்தால் இந்த லஞ்ச குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளலாம்.

லஞ்சம் வேறு ஹவாலா வேறு
ஒரு அமைப்புக்கு லஞ்சம் தருவது மற்றும் ஹவாலா பரிவர்த்தனை இரண்டும் தனித்தனி வழக்குகள். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து
விசாரிக்கக்கூடாது.இதுகூட அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.எது எப்படி இருந்தாலும் என்னுடைய பார்வையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை
சின்னம் தொடர்பாக தவறான முடிவை எடுத்துள்ளது.

எல்லாம் விந்தைதான்
பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் சசிகலாவுடன் இருக்கும் நிலையில், ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே வைத்துக்கொண்டு ஓபிஎஸ் இரட்டை இலையை தனக்கு ஒதுக்கவேண்டும் என்று
எப்படி கேட்க முடியும் என்பதே விந்தையாக இருக்கிறது." என்று கூறியுள்ளார் சுப்ரமணியசாமி.












Click it and Unblock the Notifications