For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் இளம் 'மும்மூர்த்திகள்'!

குஜராத் சட்டசபை தேர்தல் களத்தில் காங்கிரஸ், பாஜகவை தாண்டி இந்த முறை 3 இளைஞர்கள்தான் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத் தேர்தலில் முக்கியமாக பார்க்கப்படும் அந்த 3 நபர்கள்- வீடியோ

    அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் களத்தில் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்தான் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வந்தனர். இந்த முறை இந்த இரு கட்சிகளையும் தாண்டி 3 இளைஞர்கள்தான் குஜராத் சட்டசபை தேர்தல் களத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர்.

    24 வயது ஹர்திக் பட்டேல்.. சட்டசபை தேர்தலில் போட்டியிடக் கூடிய வயது கூட இல்லாத இளைஞர். இவரது தலைமையில்தான் இதுநாள் வரை பாரதிய ஜனதாவின் பிரதான வாக்கு வங்கியாக இருந்த பட்டேல்கள் சமூகம் ஓரணியாக திரண்டுள்ளது.

    பட்டேல்கள் கிளர்ச்சி

    பட்டேல்கள் கிளர்ச்சி

    குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, இடஒதுக்கீடு கோரி வரலாறு காணாத கிளர்ச்சியை ஹர்திக் பட்டேல் நடத்தினார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஹர்திக் பட்டேல் தலைமையில் சிறை சென்றனர். தேசதுரோக வழக்குகளை எதிர்கொண்டனர். தற்போது தேர்தல் களத்தில் காங்கிரஸுடன் கை கோர்த்துள்ளார் ஹர்திக் பட்டேல்.

    ஓபிசி வாக்குகள்

    ஓபிசி வாக்குகள்

    பிற்படுத்தப்பட்ட சமூகமான சத்ரிய தாகுர் சமூகத்தைச் சேர்ந்த அல்பேஷ் தாகூரும் இந்த தேர்தல் களத்தில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார். இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளுடன் காங்கிரஸில் இணைந்துள்ளார் அல்பேஷ்.

    தலித்துகளின் தலைவர்

    தலித்துகளின் தலைவர்

    முற்படுத்தப்பட்ட சமூகமான பட்டேல்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகமான தாகுர் ஆகியோரைத் தொடர்ந்த் தலித் சமூகத்தின் தலைவரான ஜிக்னேஷ் மேவானியும் இம்முறை குஜராத் தேர்தல் களத்தின் தீர்மானிக்கும் சக்தியாக விஸ்வரூபமெடுத்துள்ளார். உனாவில் மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜகவின் வெறித்தனத்தால் தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்ட கோப நெருப்பில் கிளர்ந்தெழுந்தவர் ஜிக்னேஷ். தற்போது வத்காம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    தகர்ப்பார்களா?

    தகர்ப்பார்களா?

    குஜராத்தின் ஜாதி அடிப்படையிலான வாக்குகள் அனைத்தும் இந்துக்கள் வாக்குகள் என்ற பெயரால் பாஜகவால் அறுவடை செய்யப்பட்டு வந்தன. இம்முறை இந்து வாக்குகள் என்கிற மாயையை இந்த இளைஞர்கள் தகர்த்துள்ளனரா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

    English summary
    Gujarat election have showed new faces like Hardik Patel, Alpesh Thakor and Jignesh Mevani who are viewed as opposition leaders in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X