தினமும் கிளம்பி வர்றாங்களே- காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தர எதிர்ப்பு: 36-ம் நாள் மண்டியா போராட்டம்!
மண்டியா: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவின் மண்டியாவில் 36-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீர் உரிமையை தரவே கூடாது என்பதுதான் கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம். காவிரி மேலாண்மை ஆணையமோ உச்சநீதிமன்றமோ உத்தரவிட்டாலும் 'மதிக்கவே' கூடாது 'மிதிக்க' வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கை.

தமிழ்நாட்டுக்கு சொற்ப அளவிலான நீரை கர்நாடகா திறந்துவிடுகிறது. இதனையும் கூட திறக்கவே கூடாது என்கின்றன கன்னட அமைப்புகள். இதனால் மண்டியா பந்த், கர்நாடகா பந்த், பெங்களூர் பந்த் என பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மண்டியாவில் தொடர் போராட்டம்: தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகா பாஜக தொடங்கி வைத்த போராட்டம் மண்டியாவில் நேற்று 36-வது நாளாக நீடித்தது. இதனால் மண்டிய விசுவேஸ்வரய்யா சிலை பகுதி போர்க்களமாக மையம் கொண்டிருக்கிறது. அகில பாரத ஜீவ விமா, கதம்பை சைன்யா, பாரதிய மஜ்ஜர் சங்கம், மேகதாது போராட்ட குழு என வரிசை வரிசையாய் கன்னட அமைப்பினர் நேற்றைய கன்னட விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். காவிரி ஹித ரஷ்னா என்ற அமைப்பினர் மைசூர்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
36-வது நாள் போராட்டத்தால் பதற்றம்: இன்னொரு கன்னட அமைப்பினர் மண்டியா காவிரித் தாய் சிலைக்கு பூஜைகள் நடத்திய கையோடு குடகு மாவட்டத்தின் தலைக்காவிரிக்கு வாகன பேரணியாகவும் சென்றனர். மண்டியா போராட்டங்களில் பங்கேற்றவர்கள், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்காதே! முதல்வர் சித்தராமையா- துணை முதல்வர் டிகே சிவகுமார் பதவி விலகு! என முழக்கங்களை எழுப்பினர். 36 நாட்களாக மண்டியாவில் போராட்டம் நீடிப்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவுகிறது.
சிக்கமகளூர் போராட்டம்: இதேபோல சிக்கமகளூரிலும் கன்னட அமைப்பினர் தமிழ்நாட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் கூட்டணை அமைத்து ஒப்பந்தம் போட்டு கர்நாடகாவுக்கு துரோகம் செய்து வருகின்றனர்; தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடுவதை உடனே நிறுத்தாவிட்டால் அதை நிறுத்த செய்யும் போராட்டத்தில் குதிப்போம் எனவும் சிக்கமகளூர் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications