காவிரி மேலாண்மை செயல்திட்டம்.. முடிவாகாத பெயர்.. தலைமையிடம் மட்டும் பெங்களூரில்!
காவிரி மேலாண்மை வரைவு திட்டத்திற்கான தலைமையிடம் பெங்களூரில் செயல்படும் என்றும், இதற்கு விரைவில் புதிய பெயர் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வரைவு திட்டத்திற்கான தலைமையிடம் பெங்களூரில் செயல்படும் என்றும், இதற்கு விரைவில் புதிய பெயர் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த 14 பக்க வரைவு அறிக்கையில் சில முக்கியமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த காவிரி மேலாண்மை செயல்திட்டத்திற்கு என்று எந்த பெயரும் வைக்கப்படவில்லை. தற்காலிகமாக ''காவிரி மேலாண்மை செயல்திட்டம் 2018'' என்று பெயர் வைத்துள்ளனர். என்ன மாதிரியான பெயர் சூட்டலாம் என்ற உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.
இந்த செயல்திட்டத்தை நிர்வகிக்க அனைத்து மாநிலங்களும் செலவு செய்ய வேண்டும். அதாவது, காவிரியில் இருந்து நீர் பெறும் 4 மாநிலங்களும் இந்த செயல்திட்டதிற்கான செலவை பிரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தப்படியாக, மிக முக்கியமான விஷயம், இந்த காவிரி மேலாண்மை செயல்திட்ட அமைப்பின் தலைமையிடம் பெங்களூரில் செயல்படும்.
இதற்கு தனியே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். பிரச்சனை வரும் சமயங்களில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.மொத்தம் இதில் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். யார்,யார் எந்த மாநிலம் என்பது அடுத்தகட்ட விசாரணையில் முடிவாகும்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications