காவிரி: மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும்.. செயல்திட்ட குழு மேற்பார்வையிடும்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ

  டெல்லி: காவிரி நீர் ஓடும் பகுதிகளில் உள்ள அணைகள் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று மத்திய அரசு சமர்ப்பித்த காவிரி மேலாண்மை செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

  காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

  Cauvery Management Scheme: State Government has the control over dams as usual

  இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

  இந்த நிலையில் இந்த காவிரி மேலாண்மை செயல்திட்டத்தின் 4வது பத்தியில் மிக முக்கியமான விஷயம் கூறப்பட்டுள்ளது. காவிரி நீர் ஓடும் பகுதிகளில் உள்ள அணைகள் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று மத்திய அரசு சமர்ப்பித்த காவிரி மேலாண்மை செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை செயல்குழு இதனை மேற்பார்வையிடும், ஆனால் அணையின் கட்டுப்பாடு மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

  அதன்படி கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணசாகர் அணை, கேரளாவில் உள்ள பன்சூராசாகர் அணை, தமிழகத்தில் உள்ள கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் ஆகிய அணைகள் அனைத்தும் எப்போதும் போல மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஆனால் காவிரி மேலாண்மை செயல்திட்ட குழு அதை மேற்பார்வையிடும். அதேபோல் இந்த குழு 10 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் திறந்துவிடும் படி ஆணையிடும்.

  இந்த குழுவின் பரிந்துரையை மாநில அரசுகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பின் உபரி தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த குழுதான் குறிப்பிடும், அதைத்தான் அந்த மாநில அரசுகள் செய்ய வேண்டும் .

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Central govt has submitted a scheme to set up Cauvery Management board said Ministry of Water Resources Secretary UB Singh in Supreme court. According to this, State Government has the control over dams.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற