பேங்க் ஆப் பரோடா கிளையில் ரூ. 6172 கோடி கருப்புப் பணம் பரிவர்த்தனை... 50 இடங்களில் சிபிஐ ரெய்டு
டெல்லி: டெல்லியில் உள்ள பேங்க் ஆப் பரோடா கிளையில் ரூ. 6000 கோடி அளவுக்கு கருப்புப் பணம் கையாளப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை வெடித்துள்ள விவகாரத்தில் இன்று நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு டெல்லி, பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ஹாங்காங்கிற்கு கருப்பு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் நேற்று வடக்கு டெல்லியில் உள்ள அந்த வங்கியில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தனது ஆட்சியில் ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி கூறி வருவது பொய். அவரது ஆட்சி அமைந்த 2 மாதங்களுக்குப் பிறகு ரூ.6,000 கோடிக்கும் கூடுதலான கருப்புப்பணம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக, டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் உள்ள 59 கணக்குகளில் ரூ.6,172 கோடி முன்கூட்டியே டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அந்தத் தொகை ஹாங்காங்கில் உள்ள சில நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. இத்தொகையை அனுப்பியவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியின்படி, மேற்கண்ட நிறுவனங்களில் 3 நிறுவனங்களைக் கண்டறிய இயலவில்லை.
ஹாங்காங்கில் இருந்து அரிசி, முந்திரி, பருப்பு வகைகள் ஆகியவற்றை வாங்குவதற்காக இந்தத் தொகை அனுப்பி வைக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தது வேடிக்கையாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அறிக்கையை சமர்பித்த பிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு முறைகேடு வங்கியின் உயரதிகாரிகள் அல்லது நிதி அமைச்சகத்தின் உதவியின்றி நடந்திருக்க முடியாது.
டெபாசிட்டுகள், டிரான்ஸ்பர், பண எடுப்புகள் உள்ளிட்டவற்றில் ஒரு நிறுவனம் வங்கியில் செய்யும் பரிமாற்றங்களை முறைப்படி கண்காணிக்காமல் ஒரு அரசு வங்கி எப்படி இந்த அளவுக்கு பொறுப்பின்றி நடந்து கொள்ள முடியும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று குறிப்பிட்ட அந்த வங்கியில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 இடங்களில் அதிரடி ரெய்டு
இந்த நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டுகளை நடத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications