2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்ய காரணம் இதுதான்
Recommended Video

டெல்லி: 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நீதிமன்றம் விளக்கியுள்ளது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார்.
வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். இதனால் காங்கிரஸ் மற்றும் திமுக வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சி அலை ஏற்பட்டுள்ளது.

திருவிழாக்கோலம்
திமுகவினர் தமிழகத்தில் மட்டுமின்றி, டெல்லியிலும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். லட்டுகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் திமுக தரப்பில் இன்று திருவிழாகோலமாக காணப்படுகிறது.

மோசடி இல்லை
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய நீதிபதி சில காரணங்களை தனது தீர்ப்பு பக்கத்தில் சுட்டிக் காட்டினார். பண மோசடி நடைபெற்றதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது அதில் முக்கியமானது.

ஆதாரமே இல்லையே
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது, முக்கியமான வேறு ஒரு தகவலையும் தெரிவித்தது. சிபிஐ சுமத்தியது கற்பனையான குற்றச்சாட்டு என்றும், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி. ரூ.200 கோடி கலைஞர் டிவிக்கு மாற்றப்பட்டது, முதலில் வந்தோருக்கு முதலில் முன்னுரிமை என்ற நடைமுறையில் மாற்றங்கள் செய்ததது, கட்-ஆப் தேதியை மாற்றியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையும் தவறான தகவல்களுடன்தான் இடம் பெற்றுள்ளது.

ஒன்றுமே இல்லை
இதன் மூலம், இத்தனை ஆண்டுகாலமாக ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, இந்த வழக்கு நடைபெற்று வந்துள்ளது, பொது வெளியில் இப்படி தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications