For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் மோடியை மமதா காத்திருக்க செய்த விவகாரம்: மே.வங்க தலைமை செயலாளரை திடீரென மாற்றியது மத்திய அரசு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாய் திடீரென மத்திய அரசு பணிக்கு இடம் மாற்றியிருப்பது புதிய சர்ச்சையாகி உள்ளது.

வங்க கடலில் உருவான அதிதீவிர யாஸ் புயல் ஒடிஷா- மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. யாஸ் புயலின் கோரத்தாண்டவத்தால் ஒடிஷா, மேற்கு வங்கம் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த நடிகர் சுபா வெங்கட் - திரைப்படத்துரையினர் அதிர்ச்சி கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த நடிகர் சுபா வெங்கட் - திரைப்படத்துரையினர் அதிர்ச்சி

இந்த புயல் பாதிப்பு விவரங்களை பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அரை மணிநேரம் காத்திருக்க வைத்தார்; பிரதமர் மோடி நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் மேற்கு வங்க தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை என சர்ச்சை எழுந்தது.

மோடி கூட்டத்தை புறக்கணித்தாரா மமதா?

மோடி கூட்டத்தை புறக்கணித்தாரா மமதா?

ஆனால் பிரதமர் மோடியை ஒதுக்கப்பட்ட நேரத்தில் சந்தித்து புயல் பாதிப்பு விவரங்கள் தொடர்பான அறிக்கையை மமதா வழங்கினார்; அத்துடன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடியிடம் ஒப்புதல் பெற்றே மமதா புறப்பட்டுச் சென்றார் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

மமதாவுக்கு கண்டனம்

மமதாவுக்கு கண்டனம்

மேலும் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீன் தன்கார், மமதா பானர்ஜியின் இந்த அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் மற்று பாஜக தலைவர்களும் மமதாவின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது என தெரிவித்திருக்கின்றனர்.

தலைமை செயலாளர் மாற்றம்

தலைமை செயலாளர் மாற்றம்

இந்நிலையில் மேற்கு வங்க மாநில தலைமை செயலாள ஆலன் பந்தோபத்யாய் நேற்று மத்திய அரசால் திடீரென பணியிடம் மாற்றம் செய்யபட்டார். மத்திய அரசின் குறைதீர்க்கும் நலன் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். வரும் 31-ந் தேதி டெல்லியில் இந்த புதிய பணியில் சேரவும் அவருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பணி நீட்டிப்பும் இடமாற்றமும்

பணி நீட்டிப்பும் இடமாற்றமும்

ஆலன் பந்தோபத்யாய் வரும் 31-ந் தேதிதான் பணி ஓய்வு பெறுகிறார். மேற்கு வங்க தலைமைச் தலைமைச் செயலாளர் பதவியில் மேலும் 3 மாதம் அவர் பணியில் நீடிப்பார் என்றும் முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திடீரென ஆலன் பந்தோபத்யாய் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளது புதிய சர்ச்சையாகி உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

English summary
West Bengal's chief secretary Alapan Bandyopadhyay was recalled by the Centre on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X