For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் சீமாந்திரா முதல்வராக உள்ளவருமான, சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் இன்று சந்தித்து தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து ஆலோசிக்க உள்ளார்.

Chandrababu Naidu arrives in Delhi, to meet Narendra Modi

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூன் 2ம்தேதி முறைப்படி இவ்விருமாநிலங்கள் உதயமாகின்றன. முன்னதாக கடந்த ஆட்சியின்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங், சீமாந்திராவுக்கு ஐந்தாண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இதுகுறித்து ஆலோசிக்க சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி சென்றார்.

அங்கு, இன்று காலை நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மாலையில் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க உள்ளார். பாஜகவும், தெலுங்கு தேசமும் நாடளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று உறுதியளித்தது. காங்கிரஸைவிட ஒருபடி மேலேபோய், சீமாந்திராவுக்கு 10 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

English summary
Telugu Desam Party chief N Chandrababu Naidu on Friday arrived here to meet Prime Minister Narendra Modi. Naidu met Finance Minister Arun Jaitley this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X