வீணாகும் தந்திரம்? சத்தீஸ்கரில் புலம்பும் பாஜக.. மாஸ் காட்டும் காங்கிரஸ்! டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் டைம்ஸ்நவ்-இடிஜி ரீசர்ஜ் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் ரீசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், பாஜகவின் தேர்தல் தந்திரம் பலிக்காமல் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 5 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. 1998 ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் பாஜக வென்றது. இதனால் சத்தீஸ்கர் பாஜகவின் கோட்டையாக கருதப்பட்டது.

இதற்கிடையே தான் கடந்த 2018 சட்டசபை தேர்தலில் பாஜகவின் கோட்டையில் ஓட்டை விழுந்தது. அதாவது அந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் முதல்வராக பூபேஷ் பாகேல் பொறுப்பேற்றார். தற்போது அவர் தான் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் 2 கட்டங்களாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டு அதற்கான தேதியை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 7 ம் தேதி முதல் கட்ட தேர்தலும், அதன்பிறகு நவம்பர் 17 ம் தேதி 2வது கட்ட சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் மறுபுறம் மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டு மீண்டும் அரியணை ஏறும் வகையில் வியூகம் வகுத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டைம்ஸ்நவ்-இடிஜி ரீசர்ஜ் சார்பில் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 51 முதல் 59 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க மொத்தம் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. ஆனால் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.
மாறாக பாஜகவுக்கு இந்த கருத்து கணிப்பு என்பது அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது. இந்த முறை சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அரியணை ஏற வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு வியூகங்களை வகுத்த செயல்பட்டு வரும் பாஜகவுக்கு இந்த கருத்து கணிப்பு ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. அதன்படி பார்த்தால் பாஜக 27 முதல் 35 சட்டசபை தொகுதிகளில் மட்டும் வெல்லும் எனவும், மற்றவர்கள் 2 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications