நெருங்க முடியலையே.. சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. பாஜகவுக்கு ஷாக் - புது கருத்து கணிப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவை வீழ்த்தி மீண்டும் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் இருக்கிறார். துணை முதல்வராக சிங் தியோ இருக்கிறார். இந்நிலையில் தான் 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7 ம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17 ம் தேதி 2வது கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
சத்தீஸ்கரை பொறுத்தமட்டில் நேரடி போட்டி என்பது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் உள்ளது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். சத்தீஸ்கரை பொறுத்தமட்டில் மொத்தம் 90 சட்டபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதேபோல் தான் இந்த முறையும் அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அரியணை ஏற பாஜகவும் தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில் தான் கிரவுண்ட் ஜீரோ ரீசர்ஜ் (Ground Zero Research) எனும் கருத்து கணிப்பு அமைப்பு சார்பில் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்காக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 25ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை மொத்தம் 60 தொகுதிகளில் இந்த கருத்து கணிப்பு என்பது மேற்கொள்ளப்பட்டடுள்ளது. அனைத்து சாதி மக்கள், பிரிவு மக்கள் என மொத்தம் 6 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு என்பது மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 50 முதல் 58 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டும் மெஜாரிட்டியுடன் சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்கும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு 43 முதல் 47 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜக 29 முதல் 37 இடங்களில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 37 முதல் 41 சதவீத ஒட்டுக்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர மற்றவர்கள் 1 முதல் 5 இடங்களில் வெற்றி பெறலாம். இவுர்களுக்கு14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஓட்டு கிடைக்க வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications