For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம்.. தேர்தல் ஆணையம் மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு

By Veera Kumar
Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் கமிஷன் மீது காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கடந்த 12 ஆம் தேதி, தேர்தல் கமிஷன் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அன்றைய தினம் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

Chidambaram takes dig at Election Commission on Gujarat election date delay

ஆனால், அன்று குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை. செய்தியாளர்கள் அதுபற்றி கேள்வி எழுப்பியபோது, டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் குஜராத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று மட்டும் தெரிவித்தது.

குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன. இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் தேர்தல் கமிஷனை விமர்சித்துள்ளார்.

டிவிட்டரில் சிதம்பரம் கூறியுள்ளதாவது: குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி தனது இறுதிகட்ட பிரசாரத்தில் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. மாநிலத்தில் அனைத்து இலவச திட்டங்களும் வழங்கப்பட்ட பிறகு தேர்தல் ஆணையம் தனது விடுமுறையை முடித்துகொண்டு தேர்தல் தேதியை அறிவிக்கும். இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

English summary
Chidambaram's tweets Friday implied the EC is hand-in-glove with the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X