"சாக்லெட்” ஏற்படுத்திய மரணம்- 10 மாதக் குழந்தை மூச்சுத் திணறி பரிதாப பலி
ஹைதராபாத்: ஆந்திராவில் சாக்லெட் சாப்பிட்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பானியம் கிராமம் பி.சி.காலனியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி ஹசினா. இந்த தம்பதிக்கு தனா என்ற 3 வயது பெண் குழந்தையும், ரிஹான் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், ஹசினா அழுது கொண்டு இருந்த தனது மகளுக்கு சாப்பிட சாக்லெட் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட தனா சிலவற்றை தரையில் கொட்டினாள். அருகில் தவழ்ந்து கொண்டு இருந்த 10 மாத குழந்தையான ரிஹான் சாக்லெட்டை எடுத்து விழுங்கியது.
இதில் சாக்லெட் தொண்டையில சிக்கி கொண்டது. இதனை கவனித்த தாய் ஓடிவந்து வாயில் விரலை விட்டு எடுக்க முயன்றார். ஆனால் சாக்லெட் தொண்டையில் சிக்கி ஒட்டிக் கொண்டது
மூச்சுதிணறிய குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்து போனது. குழந்தையின் பிணத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் அனைவர் மனதையும் உருக்குவதாக அமைந்தது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications