1,000 கி.மீ கால்வாய் அமைத்து பிரம்மபுத்திராவை திசைமாற்றிவிடுகிறதா சீனா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரம்மபுத்திராவை திசை மாற்றுவதற்காக 1,000 கி.மீ தொலைவுக்கு கால்வாயை சீனா வெட்டுவதாக வெளியான தகவலால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஹாங்ஹாங்கில் இருந்து வெளியாகும் செளத் சைனா மார்னிங் போஸ்ட்டில், சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தின் தண்ணீர் தேவைக்காக திபெத்தில் இருந்து 1,000 கி.மீ கால்வாய் வெட்ட சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது இந்தியா- சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

China planning 1000km tunnel to divert water away from Brahmaputra

அண்மையில்தான் டோக்லாம் எல்லை பிரச்சனை தீர்ந்தது. இந்த நிலையில் பிரம்மபுத்திராவை திசைமாற்றிவிடும் வகையில் சீனா கால்வாய் வெட்டுவதாக செய்திகள் வெளியானது இருதரப்பு உறவு மீண்டும் சிக்கலானாது.

ஆனால் சீனாவோ இதை உடனடியாக மறுத்துள்ளது. இப்படியான ஒரு திட்டமே தங்களிடம் இல்லை என்றும் ஹாங்ஹாங் பத்திரிகை பொய்யான செய்தி வெளியிட்டுள்ளது எனவும் சீனா விளக்கம் அளித்திருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hong Kong-based publication claimed that China is testing ways to divert water from Brahmaputra in Tibet to the parched Xinjiang region.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற