இது தீர்வல்ல.. ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஹாட்லைனில் பொங்கிய இந்தியா.. சீனாவின் கோரிக்கை மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

லடாக்: பாங்காங் திசோ பகுதியில் இருந்து மேலும் படைகளை வாபஸ் வாங்க முடியாது, தற்போது அங்கிருக்கும் ரோந்து பகுதிகளில் இருந்து பின்வாங்க முடியாது என்று இந்தியா அதிரடியாக தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாங்காங் திசோ பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு கட்டுப்பாட்டு பகுதி 5-8 வரை சீனா மொத்தமாக படைகளை குவித்து உள்ளது. அதேபோல் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் கட்டுப்பாட்டு பகுதி 4ல் கூட சீனாவின் வாகனங்கள் இருக்கிறது.

Recommended Video

    நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.. China-க்கு India சொன்ன Message

    ஒப்பந்தத்தை மீறி அங்கு சீனா அதிக படைகளை குவித்து உள்ளது. அதேபோல் டெப்சாங் பகுதியில் இருக்கும், கோக்ரா என்ற இடத்தின் கட்டுப்பாட்டு பகுதி 17லும் இதேபோல் சீனாவின் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது.

    பேச்சுவார்த்தை எப்படி

    பேச்சுவார்த்தை எப்படி

    இதுவரை நடந்த பேச்சுவார்த்தை எதிலும் பாங்காங் திசோ குறித்து பேசுவதற்கு கூட சீனா மறுத்துவிட்டது. கடந்த முறை லெப்டினன் ஜெனரல் மற்றும் சீனாவில் மேஜர் ஜெனரல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பாங்காங் திசோ குறித்து பேச சீனா மறுத்தது. அதோடு அங்கு சீனா புதிய படகுகள், முகாம்களை அமைத்து வருகிறது. இதனால் கண்டிப்பாக குளிர் காலத்திற்காக சீனா தயாராகி வருகிறது என்றுதான் கூறுகிறார்கள்.

    இந்தியா என்ன சொன்னது

    இந்தியா என்ன சொன்னது

    நிலைமை இப்படி இருக்க லடாக்கில் பாங்காங் திசோ பகுதியில் இருந்து மேலும் படைகளை வாபஸ் வாங்க முடியாது, தற்போது அங்கிருக்கும் ரோந்து பகுதிகளில் இருந்து பின்வாங்க முடியாது என்று இந்தியா அதிரடியாக தெரிவித்துள்ளது. சீனா இந்தியாவிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கோரிக்கையை வைத்து இருக்கிறது. பாங்காங் திசோவில் பதற்றம் நிலவும் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இந்தியாவை பின்வாங்கும் படி சீனா கோரிக்கை வைத்தது.

    தீர்வு

    தீர்வு

    இந்தியா அங்கிருந்து பின்வாங்குவது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். பாங்காங் திசோவில் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து இந்தியா பின்வாங்கினால் மொத்தமாக பிரச்சனை சரியாகிவிடும் என்று சீனா கூறியது. இது அக்சய் சின் பகுதியில் சீனா பயன்படுத்திய யுக்தி ஆகும். அதாவது போரே செய்யாமல் பேச்சுவார்த்தை மூலம் இடங்களை ஆக்கிரமிப்பது. ஆனால் இந்த முறை இந்தியா சீனாவின் தந்திரத்திற்கு பணியவில்லை.

    வாபஸ் வாங்க முடியாது

    வாபஸ் வாங்க முடியாது

    எல்லையில் முழுமையாக அமைதி திரும்பும் வரை எந்த இடத்தில் இருந்தும் ஒரு இன்ச் கூட படைகளை வாபஸ் வாங்க முடியாது. இது தொடர்பாக ஹாட்லைன் தொலைபேசி உரையாடலில் இந்தியா இப்படி வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை கூறியுள்ளது. சீனா மொத்தமாக அங்கிருந்து படைகளை வாபஸ் வாங்கும் வரை, இந்தியா தனது படைகளை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் இல்லை, என்று இந்தியா அதிரடியாக கூறிவிட்டது.

    எந்த இடம்

    எந்த இடம்

    இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பாங்காங் திசோ கட்டுப்பாட்டு பகுதி 4ல் இருந்து இந்தியாவின் படைகளை வாபஸ் வாங்க வைக்க சீனா முயற்சி செய்கிறது. இந்தியா இதை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. கண்டிப்பாக இங்கு இந்தியா இப்போதைக்கு படைகளை குறைக்காது என்று ராணுவ தரப்பு கூறுகிறது. சீனாவின் இந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மேற்பார்வையிட்டு உள்ளார். அவர் தெரிவித்த ஆலோசனையின் படியே சீனாவிடம் இந்தியா இப்படி கோபமான எதிர்வினையை ஆற்றியுள்ளது என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+