3 தனி தனி பிரிவுகள்.. லடாக் எல்லையில் இந்திய ராணுவம் அமைத்த "வளையம்''.. சீனா இனி நெருங்க முடியாது!
லடாக்: லடாக் எல்லையில் இந்திய ராணுவ படை வளையம் போன்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இதனால் சீனா எல்லையில் அத்துமீறுவது மிகவும் கடினம் என்கிறார்கள்.
Recommended Video
லடாக் எல்லையில் அமைதி திரும்புவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. கடந்த 15ம் தேதி அங்கு நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்கள் கிட்டத்தட்ட 43 பேர் வரை கொலை செய்யப்பட்டனர்.
அதன்பின் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் நடந்த பேச்சுவார்த்தை எல்லாம் வரிசையாக தோல்வியை தழுவி விட்டது.

லடாக் எல்லை
இந்த நிலையில் லடாக் எல்லையில் இந்திய ராணுவ படை வளையம் போன்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இதனால் சீனா எல்லையில் அத்துமீறுவது மிகவும் கடினம் என்கிறார்கள். அதன்படி ஒரு பக்கம் இந்திய விமானப்படை அப்பாச்சி ஹெலிகாப்டர்களை, டேங்குகள், சுகோய் விமானங்களை களமிறக்கி உள்ளது. இது மூன்று எல்லையில் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ரோந்து பணிக்கும், சுகோய் விமானங்கள் எல்லை பாதுகாப்பு பணிக்கும் , அவசர தாக்குதலுக்கும், டேங்குகள் அதிரடி பதிலடி தாக்குதலுக்கு தயாராக உள்ளது. இந்த மூன்று குழுக்கள் சேர்ந்துதான் எல்லையில் வளையம் போன்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் எல்லையில் சீனா ராணுவம் எல்லை மீறுவது மிகவும் சிரமமான காரியம் என்கிறார்கள்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் மொத்தம் கல்வான், பாங்காங் திசோ, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோயல், புக்சே, முர்கோ, டேஸ்போங், தெம்சாக் ஆகிய இடங்களில் இந்த மூன்று பிரிவுகளை தனி தனியாக நிறுத்து இருக்கிறது. இங்குதான் சீனா அதிகமாக தாக்குதல்களை நிகழ்த்தவும் ஊடுருவலை ஏற்படுத்துவம் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார்கள். அதனால் இந்த 900 கிமீ பகுதி தூரத்திற்குத்தான் படைகள் அதிகம் குவிக்கப்பட்டு உள்ளது .

இரண்டு நாட்டு படைகள்
அதேபோல் இன்னொரு பக்கம் சீனாவும் தனது படைகளை குவித்து வருகிறது. சீனாவும் தனது போர் விமானங்களை குவித்து வருகிறது என்று கூறுகிறார்கள். இரண்டு நாட்டுக்கு இடையில் போர் வந்தாலும் கூட பெரும்பாலும் விமானப்படைதான் போரில் முன்னிலை வகிக்கும்.விமானப்படையை மையமாக வைத்தே போர் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

வேறு என்ன
இன்னொரு பக்கம் இந்தியா எல்லையில் லடாக் அருகே தற்போது இந்தியா தனது ஸ்பெஷல் மலை பாதுகாப்பு படை எனப்படும் "Special Mountain Force" படையை களமிறக்கி உள்ளது. இவர்கள் கொரில்லா பயிற்சி பெற்றதால் மலை மீது நொடிப்பொழுதில் வேகமாக ஏறி தாக்குதல் நடத்துவதில் வல்லவர்கள். இமயமலை தொடர், கே 2 சிகரத்தில் சீனா செய்யும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் இந்த படைகள் களமிறக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், கோர்கா , லடாக், அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மலை பகுதிகளில் இந்த படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications