கோ சீனா கோ.. குஜராத், டெல்லி, உ.பியில் சீனாவிற்கு எதிராக வெடித்த போராட்டம்.. கோபத்தில் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: சீனாவிற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. சீன பொருட்களை உடைத்து நாடு முழுக்க மக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Recommended Video

    Boycott China சாத்தியமா? இதோ ஒரு அலசல்

    லடாக் எல்லையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. அங்கு எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்னும் நிலைமை ஏற்பட்டு உள்ளது . இரண்டு நாள் முன் லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த சண்டை இந்திய தரப்பில் பெரும் கோபத்தையும், கொதி நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    போராட்டங்கள்

    போராட்டங்கள்

    இந்த நிலையில்தான் தற்போது சீனாவிற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மக்கள் சீனாவின் செயலை கண்டித்து போராட்டங்களை செய்து வருகிறார்கள். அதில் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று குஜராத்தில் பல இடங்களில் சீன பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

    சீனாவின் உற்பத்தி

    சீனாவின் உற்பத்தி

    சீனாவின் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்பட்ட டிவி உள்ளிட்ட சாதனங்களை மக்கள் அடித்து நொறுக்குகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் கூட வெளியானது. கோ சீனா கோ சீனா என்று கோஷம் முழங்க குஜராத்தில் பல இடங்களில் சீன பொருட்கள் உடைக்கப்பட்டது. சீனாவிற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

    வேறு எங்கு போராட்டம்

    வேறு எங்கு போராட்டம்

    அதேபோல் இன்னொரு பக்கம் உத்தர பிரதேசத்திலும் போராட்டம் நடந்தது. அங்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் உருவப்படத்திற்கு கருப்பு மை பூசி போராட்டம் செய்தனர். அதேபோல் அவரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அதேபோல் ஜி ஜிங்பிங் போல பொம்மைகளை செய்து, அதன் தலையை கத்தியால் துண்டித்தும் போராட்டங்களை செய்தனர்.

    டெல்லி காலனி

    டெல்லி காலனி

    இன்னொரு பக்கம் டெல்லியில் இருக்கும் டிபன்ஸ் காலனியில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் சீனாவிற்கு எதிராக போராட்டம் செய்தனர். எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. இருந்திருந்தால் நாங்கள் சீனாவிற்கு எதிராக போருக்கு சென்று இருப்போம் என்று கூறினார்கள். சீனாவிற்கு எதிரான இந்தியாவின் எந்த ஒரு நடவடிக்கையையும் நாங்கள் முழுதாக ஆதரிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+