எல்லையை கடக்கவில்லை.. லடாக்கில் எங்கும் அத்துமீறவில்லை.. சீன ராணுவம் பகிரங்க மறுப்பு!
லடாக்கில் எல்லையை கடக்கவே இல்லை, எங்கும் அத்துமீறலை நிகழ்த்தவில்லை என்று சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
லடாக்: லடாக்கில் எல்லையை கடக்கவே இல்லை, எங்கும் அத்துமீறலை நிகழ்த்தவில்லை என்று சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பகுதிக்கு மீண்டும் சீனா குறி வைத்துள்ளது. கடந்த மே மாதம் 5ம் தேதி எந்த இடத்தில் சீனா அத்துமீறலை நிகழ்த்தியதோ அதே இடத்தில் மீண்டும் அத்துமீற முயன்று வருகிறது.
4 மாதமாக நடந்து வந்த பிரச்சனை முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியை விரும்பாத சீனாவின் படைகள் எல்லையில் அத்துமீறி உள்ளது.

அத்துமீறியது
இது தொடர்பாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வ செய்தியை இன்று வெளியிட்டது. அதன்படி லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ அருகே சீனாவின் படைகள் அத்துமீறி நுழைய முயற்சியை செய்தது. 29 மற்றும் 30 ஆகிய தேதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றது. ஆனால் இந்திய ராணுவம் இந்த அத்துமீறலை தடுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

சீனா மறுப்பு
ஆனால் இதை சீனா மறுத்துள்ளது. லடாக்கில் எல்லையை கடக்கவே இல்லை, எங்கும் அத்துமீறலை நிகழ்த்தவில்லை.எ ல்ஏசி பகுதியில் பிஎல்ஏ ராணுவம் அத்துமீறவில்லை. இந்தியா தவறான புகார்களை வைக்கிறது என்று சீனாவின் வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியா என்ன சொல்கிறது
ஆனால் சீன வீரர்களின் அத்துமீறலை ''சண்டையை தூண்டும் விதமான செயல்பாடு'' என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் சீனா வீரர்கள் எல்லைக்குள் வராமல் தடுக்கும் வகையில் எல்லையில் பாதுகாப்பு பலப்டுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் சீனாவின் வீரர்கள் 200-300 பேர் வரை எல்லையில் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. ஆயுதங்களுடன் இவர்கள் அத்துமீற முயன்று இருக்கிறார்கள்.

என்ன கட்டுமானம்
அதேபோல் எல்லை பகுதியில் சீனா மீண்டும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முயன்று வருவதாக கூறப்படுகிறது.லடாக்கில் இருக்கும் தெற்கு பகுதியில், நதி ஓரத்தில் இந்த அத்துமீறலை சீனா நிகழ்த்த முயன்று , அங்கு கட்டுமான பணிகளை செய்ய உள்ளது. முதல் முதலில் மே மாதம் சீனா எங்கே சண்டை போட முயன்றதோ அதே இடத்தில் சீனா அத்துமீற முயன்று உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications