சுசூல் பதற்றம்... இந்திய துப்பாக்கிச் சூடு எல்லைக்குள்.... சீன ராணுவம்... பதட்டம்!!

Subscribe to Oneindia Tamil

லடாக்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லைப் பகுதியில் மீண்டும் பதட்டம் நிலவி வருகிறது. சுசூல் பகுதியில் நேற்று இந்திய ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நுழைந்ததால், நேற்று முதல் பதட்டம் நிலவி வருகிறது.

Recommended Video

    Chushul- ல் China- வுக்கு எதிராக India போட்ட திட்டம்

    இந்திய, சீன எல்லையில் சுசூல் பகுதியில் சீனாவின் ஊடுருவல் குறித்து இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும், இந்தியப் பகுதியை சீன ராணுவம் மூன்றாவது முறையாக ஆக்ரமிக்க முயற்சித்தது. இது இந்திய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் பேச்சுவர்த்தை நடந்து வரும் நிலையிலும் இந்திய ராணுவத்தினருக்கு மிக அருகில் சீன ராணுவத்தினர் முகாமிட்டு இருந்தனர்.

    Chushul Tension: China military in the range of India military in Eastern Ladakh area

    இருநாடுகளுக்கும் பாங்காங் டிசோ பகுதியில் தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இங்கு இந்தியா இந்த முறை சுதாரித்துக் கொண்டு சீன ராணுவத்தை நுழைய அனுமதிக்கவில்லை. பாங்காங் டிசோ ஏரியை ஒட்டி இருக்கும் சில நூறு மீட்டர் எல்லைப் பகுதியை இந்திய தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளது. இந்த இடத்தை ஆக்ரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. ஆனால், இந்தியா தன்னை இந்த இடத்தில் வலுவாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. சீன இங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமராக்களை இந்திய ராணுவம் அடித்து நொறுக்கியது.

    பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே மீண்டும் இந்திய எல்லைக்குள் வருவதற்கு சீன ராணுவத்தினர் முயற்சித்துள்ளனர். அப்போது மெகா போன் மூலம் அத்துமீறி நுழைய வேண்டாம் என்று சீன ராணுவத்துக்கு இந்தியா தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாங்காங் ஏரி கரைப்பகுதியில் இருக்கும் ஸ்பான்குர் பகுதியில் சீன ராணுவம் நுழைய முயற்சித்து இருக்கிறது. இதை இந்திய ராணுவம் தடுத்துள்ளது.

    சுசூல் பகுதியில் இந்திய ராணுவம் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் மட்டுமின்றி, கடந்த மே மாதத்தில் இருந்து தவ்லட் பேக் ஓல்டி, தேப்சாங் பிளைன் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+