For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜினாமா.. பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா..!

பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின பவானிபூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.. எதற்காக இங்கு 8 கட்டமாக தேர்தல் நடந்தது என்பது இதுவரை காரணம் தெரியவில்லை என்றாலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் அபார வெற்றி பெற்றது.

ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தாவோ தோல்வியை சந்தித்தார்.. வாக்கு எண்ணிக்கையின்போதுகூட, மம்தா முன்னிலையில்தான் இருந்தார்..

 சுவேந்து

சுவேந்து

ஆனால், கடைசி சுற்று எண்ணிக்கையில்தான் மொத்தமாக சொதப்பலாகிவிட்டது.. அவரை எதித்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது.. 3வது முறையாக முதல்வராகவும் பொறுப்பேற்று கொண்டார்.

 ஆளும்கட்சி எம்எல்ஏ

ஆளும்கட்சி எம்எல்ஏ

இப்படிப்பட்ட சூழலில், தன்னுடைய முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்வதற்கு அடுத்த 6 மாதங்களுக்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும்... எனவே, யாராவது ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்தால்தான், அந்த தொகுதியில் நின்று போட்டியிட்டு, வெற்றி பெற்று, அதனை வைத்து முதல்வர் பதவியை தக்க வைக்க முடியும்.

 ராஜினாமா

ராஜினாமா

அந்த வகையில், பவானிபூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சோபன்தேப் சட்டோபத்யாய் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.. இந்த பவானிபூர் தொகுதியில்தான் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.. ராஜினாமா செய்த எம்எல்ஏ சட்டோபத்யாய் இதை பற்றி சொல்லும்போது, இது கட்சியின் முடிவு... அதனால், அதற்கு நான் கீழ்படிந்து நடக்க வேண்டும்... எனினும் இதை சந்தோஷமாகவே ஏற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 திருப்தி

திருப்தி

அதேபோல, மேற்குவங்க சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி இதை பற்றி சொல்லும்போது, எம்எல்ஏ சட்டோபத்யாயிடம் தாமாக முன்வந்துதான் ராஜினாமா செய்தீர்களா என்று கேட்டேன்... அதற்கு அவர் அளித்த பதில் திருப்தியாக இருக்கவும், அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன்" என்றார்.

பாஜக

பாஜக

இதையடுத்து, மம்தா அந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.. பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே அது ஆளும் தரப்புக்கு சாதகமான விஷயம் என்றாலும், இந்த முறை மேற்கு வங்கத்தில் எப்படி எப்படியோ பாஜக முயற்சி செய்தும், திரிணாமுல் கட்சியை சேர்ந்தோர் சிலரை விலைக்கு வாங்கியும், வியூகங்கள் அமைத்தும், மண்ணையே கவ்வ முடிந்தது.. 213 தொகுதிகளிலும் வென்றெடுத்த மம்தாவுக்கு இந்த தொகுதியிலும் வெற்றி என்பது எளிதாகவே அமையும்..!

English summary
CM Mamta Banerjee contest from Bhavanipur Constituency again
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X