கிரண்பேடியுடன் வலுக்கிறது மோதல்… புதுவை முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார். புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

மத்திய ஆளும் பாஜக அரசு புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. தற்போது 3 புதிய நியமன எம்எல்ஏக்களுக்கு கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததையடுத்து புதுவையில் பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி சென்றுள்ள புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நியமன எம்எல்ஏக்கள் பிரச்சனை

நியமன எம்எல்ஏக்கள் பிரச்சனை

புதுவையில் நடக்கும் பிரச்சனை குறித்து ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினேன். நியமன எம்எல்ஏக்களை நியமிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு. ஆனால் தற்போது துணை நிலை ஆளுநர் பரிந்துரையின் பேரில் அது நிகழ்ந்துள்ளது.

செல்லாத நியமனம்

செல்லாத நியமனம்

மூன்று எம்எல்ஏக்கள் நியமனம் செல்லாது. இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஊர்வலம், தெருமுனைப் பிரச்சாரம் என ஜனநாயக பூர்வமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

வளர்ச்சிக்கு குந்தகம்

வளர்ச்சிக்கு குந்தகம்

புதுவையில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எப்படி எல்லாம் அரசின் வேலைகளை செய்யவிடாமல் தடுக்கிறார் என்பது குறித்தெல்லாம் ராகுல் காந்தியிடம் சொல்லி இருக்கிறேன்.

நல்ல தீர்வு

நல்ல தீர்வு

புதுவையின் வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து போராடும் கடமையும் பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று கருதுகிறேன் என்று நாராயணசாமி கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry CM Narayanasamy met Rahul Gandhi to discuss about appointment of 3 MLAs.
Please Wait while comments are loading...