For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடுங்குளிருடன் மழை: போதுமடா சாமி, முடியல என்று நடுங்கும் வட மாநிலத்தவர்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: வடமாநிலங்களில் கடும் குளிராக இருப்பதுடன் மழையும் பெய்வது மக்களை மேலும் கதிகலங்க வைத்துள்ளது.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வார காலமாக கடுங்குளிராக உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிருடன் காலை வேளையில் பனிமூட்டமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள்.

{ventuno}

இன்று காலை டெல்லியில் கடுங்குளிராக இருந்தது. இதனால் மக்கள் சாலையோரங்களில் தீ மூட்டி குளிர் காய்ந்ததை பார்க்க முடிந்தது. குளிரை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே குளிரால் நடுங்கும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் வசிக்கும் மக்கள் இன்று மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காரணம் கனமழை. அங்கு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வட இந்தியாவில் உள்ள மலைப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கடும் குளிரும், பனிமூட்டமுமாக உள்ளது.

குளிர் காலம் எப்பொழுது முடியும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

English summary
Cold conditions have become intense in most parts of the hilly regions in the northern India. Sporadic rain worries people of Varanasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X